• Wed. Mar 18th, 2026
WhatsAppImage2026-03-12at2345221
previous arrow
next arrow
Read Now

சம்பளம் தரவில்லை. தனி ஒருவராக திருவள்ளுவர் சிலை முன்பாக உண்ணாவிரதம்…

ByKalamegam Viswanathan

Nov 7, 2023

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற பேராசிரியருக்கு ஓய்வூதியம் வழங்காததை கண்டித்து, அதை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர் அலுவலகம் முன்பு உள்ள திருவள்ளுவர் சிலை அருகே முன்னாள் வேதியல் துறை உதவி பேராசிரியர் சிவக்குமார் தனி ஒருவராக உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகிறார்.

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் வேதியல் துறையில் உதவி பேராசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்ற சிவகுமார் கடந்த மாதத்திற்கான பென்ஷன் தொகை வழங்காததை கண்டித்து மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர் அலுவலகம் முன்பு உள்ள திருவள்ளுவர் சிலை முன்பு உடனடியாக பென்ஷன் வழங்க கோரி தனி ஒருவராக உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகிறார்.

கடந்த அக்டோபர் மாதம் வழங்க வேண்டிய பென்ஷன் தொகையை வழங்காமல் தற்போது வரை இழுத்து வருவதால், தன்னுடைய சுயதேவவைகளுக்கு மிகவும் சிரமமாக உள்ளதாகவும், இதனை கருத்தில் கொண்டு பல்கலைக்கழக நிர்வாகம் உடனடியாக பென்ஷன் வழங்குமாறு கோரிக்கைகளை வைத்துள்ளார்.

உண்ணாவிரதப் போராட்டம் குறித்து சக பேராசிரியர்களிடம் கூறி ” தனி ஓருவராக”
பல்கலைக்கழக துணைவேந்தர் வாயிலில் அமர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்.