• Mon. Jan 19th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

மத்திய அரசை கண்டித்து இணைய இதழின் மீது  போடப்பட்ட எப்.ஐ.ஆர் நகலை எரித்து ஆர்ப்பாட்டம் !

ByNeethi Mani

Nov 6, 2023

டெல்லியில் நடந்த விவசாயிகளின் போராட்டத்திற்கு  அளித்து செய்தி வெளியிட்டதற்காக நியூஸ் கிளிக் என்ற இணைய இதழ் மீதும், அதன் ஆசிரியகள் மீதும், ஊழியர்கள் மீதும் உபா சட்டத்தின் மீது வழக்குபதிவு செய்து ஜாமினில் 6 மாதத்திற்கு வெளியே வர முடியாதபடி. செய்த மத்திய அரசை கண்டித்து ஜெயங்கொண்டம் காந்தி பூங்கா முன்பாக கண்டன  ஆர்ப்பாட்டம் மற்றும்  எப்,ஐ,ஆர்- ன் நகலை  நகல் எரிக்கும் போராட்டம்   நடைப்பெற்றது.  தமிழ்நாடு விவசாயிகள் சங்க ஒன்றிய செயலாளர் தியாகராஜன் தலைமை வகித்தார்.  மாவட்ட செயலாளர் மணிவேல், மாவட்ட தலைவர் செந்தில்வேல், சிபிஐ  மாவட்ட செயலாளர் ராமநாதன், சிபிஎம் ஒன்றிய செயலாளர் வெங்கடாசலம் மாதர் சங்க மாவட்ட தலைவர் பத்மாவதி,  டிஒய்எப்ஐ மாவட்ட தலைவர் ரவீந்தரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய செயலாளர் இளவரசன்,  ஒன்றிய பொருளாளர் தனவேல், மற்றும் கட்சி நிர்வாகிகள்  ராஜேந்திரன், கணேசன், இளவரசன், ராசா,  பரமசிவம், மாவட்டக்குமுஉறுப்பினர் சேகர் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.