• Wed. Jan 21st, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

நாகர்கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகளை முற்றுகையிட்டு பரபரப்பை ஏற்படுத்திய எம்.பி.விஜய்வசந்த்..!

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பார்வதிபுரத்தில் 3 தலைமுறையாக குடியிருந்து வரும் மக்களை இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் ஆக்கிரமிப்பு என்ற பெயரில் குடியிருப்புவாசிகளை காலி செய்ய சொன்னதால் பரபரப்பு – விஜய் வசந்த் எம்.பி மற்றும் பொதுமக்கள் அறநிலையத்துறை அதிகாரிகளை முற்றுகையிட்டதால் பதற்றம் – போலிஸ் குவிப்பு.


கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பார்வதிபுரத்தில் நூறு ஆண்டுகளுக்கு மேலாக கோவில் நிலங்களை வாடகைக்கு எடுத்து வீடுகள் கட்டி ஏழை எளிய மக்கள் காலம் காலமாக வசித்து வருகின்றனர். கிட்டத்தட்ட 3 தலைமுறையாக குடியிருந்து வருகிறார்கள். திடீரென இந்து அறநிலையத்துறை அந்த இடங்களை ஆக்கிரமிப்பு என கூறி காலி செய்ய சொல்லி வற்புறுத்தி வருகின்றனர்.

இதனால் பெரும்பாலானோர் நீதி மன்றம் சென்று வழக்கு தொடுத்து வழக்கு நிலுவையில் இருந்து வருகிறது. அவர்களை மட்டும் விட்டு விட்டு வழக்குக்கு செல்ல முடியாத கூலி தொழிலாளிகளை ஆக்கிரமிப்பு என்ற பெயரில் குடியிருப்புவாசிகளை காலி செய்ய சொன்னதால் வாக்குவாதம் நடந்து பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த காங்கிரஸ் எம்.பி விஜய் வசந்த் மற்றும் பொதுமக்கள் சேர்ந்து அறநிலையத்துறை அதிகாரிகளை முற்றுகையிட்டதால் பதற்றம் ஏற்பட்டு உள்ளது – இதனால் ஏராளமான போலிஸ் குவிக்க பட்டு உள்ளது.