• Wed. Nov 19th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

மும்பையில் தனது பயணத்தை நிறைவு செய்த பிரிமியர் பத்மினி டாக்ஸி..!

Byவிஷா

Nov 1, 2023

மும்பையில் 20 வருடங்களாக ஓடிக்கொண்டிருந்த பிரிமியர் பத்மினி டாக்ஸி தனது சேவையை நிறைவு செய்தது.
மும்பையில் 20 ஆண்டுகளான டாக்ஸிகள் சேவையிலிருந்து அப்புறப்படுத்தப்படுவது வழக்கம். பிரிமியர் வாகனம் கம்பெனி கடந்த 1964 -ம் ஆண்டு பத்மினி டாக்ஸிகளை அறிமுகம் செய்தது. இதன் காரணமாக, மும்பையில், 2000 -ம் ஆண்டு வரை 100 சதவிகிதம் பிரிமியர் பத்மினி டாக்ஸிகள் மட்டுமே இயக்கப்பட்டு வந்தன. ஆனால், தொழிலாளர் பிரச்சினையால் பிரிமியர் கம்பெனி மூடப்பட்டது. அதற்கு மாற்றாக வேறு சில கம்பெனிகளின் வாகனங்கள் டாக்ஸிகளாக மும்பையில் பதிவு செய்யப்பட்டு இயக்கப்பட்டன.
இதனிடையே, ஒரு வாகனத்தின் ஆயுட்காலம் 20 ஆண்டுகள் என அரசு கெடு விதித்தால் மொத்தமாக பிரிமியர் பத்மினி டாக்ஸிகளின் எண்ணிக்கை படிப்படியாகக் குறைய ஆரம்பித்தது. ஆனால், மாருதி போன்ற மற்ற கார்கள் இடம் பிடித்தன. இந்த நிலையில், கடந்த 2003 -ம் ஆண்டு அக்டோபர் 29 -ம் தேதி கடைசியாக பிரிமியர் பத்மினி கார் ஒன்று பதிவு செய்யப்பட்டது. இந்த கார் 20 வருடம் தனது பயணத்தை நிறைவு செய்தது. இதனால், பிரிமியர் பத்மினி கார் வாகனத்துக்கு வாடிக்கையாளர்கள் மாலை அணிவித்துப் பிரிவு உபசாரம் நடத்தினர்.