• Tue. Oct 7th, 2025
WhatsAppImage2025-10-02at0218222
WhatsAppImage2025-10-02at0218215
WhatsAppImage2025-10-02at0218217
WhatsAppImage2025-10-02at0218218
WhatsAppImage2025-10-02at0218212
WhatsAppImage2025-10-02at0218219
WhatsAppImage2025-10-02at0218211
WhatsAppImage2025-10-02at0218214
WhatsAppImage2025-10-02at021822
WhatsAppImage2025-10-02at0218223
WhatsAppImage2025-10-02at0218216
WhatsAppImage2025-10-02at0218213
WhatsAppImage2025-10-02at0218221
WhatsAppImage2025-10-02at021821
previous arrow
next arrow
Read Now

பாரா ஆசிய விளையாட்டில் பதக்கங்களை குவித்த இந்திய வீரர்கள்.., பிரதமர் மோடி வாழ்த்து..!

Byவிஷா

Oct 28, 2023

பாரா ஆசிய விளையாட்டில் இதுவரை 100 பதக்கங்களுக்கும் மேல் வென்ற இந்திய வீரர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பாரா ஆசிய விளையாட்டு போட்டிகள் சீனாவில் ஹாங்சே நகரில் நடைபெற்று வருகிறது. இந்த விளையாட்டு போட்டியில் இந்திய வீரர்கள் பதக்க வேட்டையை நடத்தி, தங்கம், வெள்ளி, வெண்கலம் என பதக்கங்களை வென்று குவித்து வருகின்றனர். இதுவரை 27 தங்கம், 31 வெள்ளி, 49 வெண்கலம் என மொத்தம் 107 பதக்கங்களை வென்றுள்ளனர். பாரா ஆசிய விளையாட்டு போட்டிகளில் 100 பதக்கங்களுக்கு மேலாக வென்ற இந்திய வீரர்களின் சாதனையை பலரும் பாராட்டி வருகின்றனர். இது குறித்து பிரதமர் நரேந்திர மோடியும் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
தனது எக்ஸ் (டிவிட்டர்) சமூக வலைதள பக்கத்தில், ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில் நமது வீரர்கள் 100 பதக்கங்கள் வென்றுள்ளனர். இந்த ஒரு கணம் இணையற்ற மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த வெற்றிக்கு நமது விளையாட்டு வீரர்களின் அதீத திறமை, கடின உழைப்பு, உறுதி ஆகியவையே காரணம். இந்த குறிப்பிடத்தக்க மைல்கல் நம் இதயங்களை மகத்தான பெருமையால் நிரப்புகிறது. எங்கள் விளையாட்டு வீரர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் அவர்களுடன் பணிபுரியும் முழு ஆதரவு அமைப்புக்கும் எனது ஆழ்ந்த பாராட்டுகளையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த வெற்றிகள் நம் அனைவரையும் ஊக்குவிக்கின்றன. நம் இளைஞர்களால் முடியாதது எதுவுமில்லை என்பதை நினைவூட்டுவதாக அவை அமைகின்றன என மகிழ்ச்சி பொங்க பதிவிட்டுள்ளார்.