• Sat. Sep 27th, 2025
WhatsAppImage2025-09-25at201821
WhatsAppImage2025-09-25at2018203
WhatsAppImage2025-09-25at2018204
WhatsAppImage2025-09-25at2018211
WhatsAppImage2025-09-25at2018202
WhatsAppImage2025-09-25at2018201
WhatsAppImage2025-09-25at2018212
previous arrow
next arrow
Read Now

விஜய் அரசியலுக்கு வரக்கூடாது என்று நினைப்பதற்கு யாருக்கும் உரிமை கிடையாது.., துரை வைகோ பேட்டி..!

ByKalamegam Viswanathan

Oct 24, 2023

இந்தியா கூட்டணி மதசார்பின்மைக்கு எதிரான கூட்டணியில் தொடர்ந்து செயல்படுகிறது. 5 மாநில தேர்தல் இருப்பதால் தேர்தலுக்குப் பின் 2024 பாராளுமன்றத் தேர்தலில் இந்தியா கூட்டணி மிகப்பெரிய அளவில் வெற்றி பெறும் _ மதுரை விமான நிலையத்தில் மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ பேட்டி தெரிவித்துள்ளார்.

மருதுபாண்டியர்கள் நினைவு நாளை ஒட்டி திருப்பத்தூர் செல்வதற்காக மதிமுக முதன்மை நிலை செயலாளர் வைகோ சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்தடைந்தார். தொடர்ந்து மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து அவர் கூறியதாவது:

திமுகவின் நீட் தேர்வு :

தமிழகத்தில் நீட் தேர்வை பாஜகவைத் தவிர அனைத்து கட்சிகளும் எதிர்க்கிறது அதில் மதிமுகவும் ஒன்று என்பதில் மாற்று கருத்து இல்லை. நீட் தேர்வுக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக தமிழக அரசு கையெழுத்து இயக்கம் துவங்கியுள்ளது அதற்கு மதிமுக சார்பாக முழு ஆதரவு உண்டு.

திமுக இதைத் தேர்தலுக்காக செய்கிறதா:

தொடர்ந்து திமுகவுடன் சேர்ந்து அனைவரும் குரல் கொடுத்து வருகிறோம். ஒரு வருடத்திற்கு மேலாகவே சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஆளுநர் கையெழுத்துக்காக காத்திருந்தது பல போராட்டத்திற்கு பிறகு ஜனாதிபதிக்கு அனுப்பி உள்ளார். ஆளுநரால்தான் இந்த ஒரு ஆண்டு கால தாமதம் ஏற்பட்டது. மீட்விளக்கு தமிழ்நாட்டிற்கு வரும் என்கிற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது.

வேண்டு மாநில தேர்தலுக்கு மதிமுக:

மணிப்பூர் கலவரத்தில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்து பாதிக்கப்பட்டனர். அது போல நாட்டில் பல்வேறு பிரச்சினைகள் உள்ளது. இதற்கு முற்றுப்புள்ளி வைப்பதற்காக ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் இருக்கும் என்கிற நம்பிக்கை உள்ளது.

நடிகர் விஜய்யை பார்த்து திமுக, அதிமுக பயப்படுகிறதா:

நடிகர் விஜயும், அவருடைய தந்தையும் உழைப்பால் உயர்ந்தவர்கள் என்பதில் சந்தேகம் இல்லை. அவரும் அரசியல் வருவதற்கு உரிமை உள்ளது. ஆனால் அதை முடிவெடுக்க வேண்டியது மக்கள்தான். அவர்கள் வரக்கூடாது என்று நினைப்பதற்கு வேறு யாருக்கும் உரிமை கிடையாது. அவர்களை எங்கு வைக்க வேண்டும் என்பதை மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும்.

இந்தியா கூட்டணி:

இந்தியா கூட்டணி மதசார்பின்மைக்கு எதிரான கூட்டணியில் தொடர்ந்து செயல்படுகிறது. 5 மாநில தேர்தல் இருப்பதால் தேர்தலுக்குப் பின் 2024 பாராளுமன்றத் தேர்தலில் இந்தியா கூட்டணி மிகப்பெரிய அளவில் வெற்றி பெறும் _

ஐந்து மாநில தேர்தலை ஒட்டி அந்தந்த மாநிலங்களில் வேலை நடைபெறுகிறது. சட்டமன்றத் தேர்தல் வேறு, நாடாளுமன்ற தேர்தல் வேறு. நாடாளுமன்றத் தேர்தலை பொருத்தவரை அனைத்து கட்சிகளும் ஒன்றுபட்டு செயல்படுகிறது.

ஜாதி வாரி கணக்கெடுப்பை தமிழக அரசு தாமதப்படுத்துகிறது என்கிற குற்றச்சாட்டு:

சாதிவாரி கணக்கெடுப்பை திமுக, மதிமுக என அனைவரும் வலியுறுத்துகிறோம். பீகாரரைப் போல மாநில அரசு ஜாதிவாரி கணக்கெடுப்பை எடுக்கலாம் என்று கூறினாலும்.
தேசிய ஜனத்தொகையுடன் ஜாதிவாரி கணக்கெடுப்பு சேர்ந்து எடுக்கும் போது பல நன்மைகள் உள்ளது, சுலபமாகவும் எடுக்கலாம். ஒன்றிய அரசு காலம் தாழ்த்தினால் தமிழக அரசு எடுக்கும்.

பாஜக பிரமுகர் கைது:
நல்லா காவல்துறை அதிகாரியாக இருந்த சகோதரர்
அண்ணாமலை ஒரு சராசரி அரசியல்வாதி தான். சில சமயங்களில் தரம் தாழ்ந்து நடந்து கொள்கிறார். அவருக்காக சட்டப்படி நடவடிக்கை எடுப்பதற்கு ஒரு மாதிரி பேசுகிறார், மாற்றுக் கட்சி கைதுக்கு வேறு மாதிரி அறிக்கை கொடுக்கிறார்.