• Sun. Sep 6th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

ஆயுதபூஜை எதிரொலி பூக்களின் விலை கிடுகிடுவென உயர்வு..!

Byவிஷா

Oct 21, 2023

ஆயுதபூஜை மற்றும் விஜயதசமியை முன்னிட்டு மதுரை மாட்டுத்தாவணி பூ சந்தையில், பூக்களின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.
நேற்று வரை ஒரு கிலோ மல்லிகை 750 ரூபாய்க்கு விற்கப்பட்ட நிலையில் இன்று கிலோ ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. முல்லைப் பூ 500 ரூபாய்க்கு விற்பனையான நிலையில் ரூ.800 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோல், கனகாம்பரம் நேற்று 500-க்கு விற்பனை ஆன நிலையில் இன்று 700 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதேபோன்று சாமந்தி, சம்பங்கி, ரோஸ், அரளி, செண்டுமல்லி ஆகிய பூக்களின் விலையும் நேற்றை விட, இன்று சற்று விலை அதிகரித்து விற்பனை செய்யப்படுகிறது.
ஆயுதபூஜை மற்றும் முகூர்த்த நாட்களை முன்னிட்டு, இன்று முதல் பூக்களின் விலை தொடர்ந்து அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாகவும், மல்லிகைப் பூ ஒரு கிலோ இருமடங்கு உயர வாய்ப்புள்ளதாகவும் வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.