• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

மத்திய அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிப்பு..!

Byவிஷா

Oct 18, 2023

மத்திய அரசு ஊழியர்களுக்குத் தீபாவளி போனஸ் வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. ‘சி’ பிரிவு மற்றும் கெசட் ரேங்க் இல்லாத ‘பி’ பிரிவு ஊழியர்களுக்குத் தீபாவளி போனஸ் வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
துணை ராணுவப் படைகளில் பணிபுரிவோருக்கும் தீபாவளி போனஸ் அளிக்க ஒப்புதல் தரப்பட்டுள்ளது. ஊழியர்களுக்கு அதிகபட்சமாக ரூ.7000 வரை போனஸ் அளிக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. எந்தெந்த ஊழியர்களுக்கு எவ்வளவு போனஸ் கிடைக்கும் என்பது குறித்து மத்திய அரசு விரிவான அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளது.
கடந்த மார்ச் 31-ஆம் தேதி முதல் 6 மாதங்களுக்கு தொடர்ந்து பணியில் இருந்தவர்களுக்கு மட்டுமே தீபாவளி போனஸ் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. துணை ராணுவப் படையினர் மற்றும் ஆயுதப் படையினருக்கும் தீபாவளி போனஸ் வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.