• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

கொடநாடு வழக்கில் இன்று இடைக்கால அறிக்கை தாக்கல்..!

Byவிஷா

Oct 13, 2023

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக கடந்த 11 மாதங்களாக நடத்திய விசாரணை குறித்து உதகை நீதிமன்றத்தில் இன்று சிபிசிஐடி போலீசார் இடைக்கால அறிக்கை தாக்கல் செய்கின்றனர்.
நீலகிரி மாவட்டம் கொடநாடு எஸ்டேட்டில் உள்ள முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மற்றும் சசிகலாவுக்கு சொந்தமான பங்களாவில் கடந்த 2017-ம் ஆண்டு கொலை, கொள்ளை சம்பவங்கள் நடைபெற்றன. இதுகுறித்து, சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், இந்த கொலை, கொள்ளை சம்பவம் தொடர்பான முழு தகவல்கள் அடங்கிய இடைக்கால அறிக்கையை ஊட்டி செசன்ஸ் நீதிமன்றத்தில் சிபிசிஐடி போலீசார் இன்று சமர்ப்பிக்க உள்ளனர். இந்த வழக்கில் கடந்த 11 மாதங்களாக நடத்திய விசாரணை குறித்து அறிக்கையை சிபிசிஐடி போலீசார் இன்று சமர்ப்பிக்க உள்ளனர்.