• Thu. Nov 27th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

நவம்பர் 2ஆம் தேதி திறனறி தேர்வு அறிவிப்பு..!

Byவிஷா

Oct 7, 2023

தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் பயிலும் 3, 6 மற்றும் 9ஆம் வகுப்பு மாணவர்களின் கற்றல் திறனை அளவிடும் திறனறி தேர்வு நவம்பர் 2ஆம் தேதி நடத்தப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
திமுக ஆட்சிப் பொறுப்பேற்றதில் இருந்து அரசுப் பள்ளி மாணவர்களின் திறனை வளர்க்கவும், பள்ளிகளில் தரமான கற்றல் சூழலை உருவாக்கவும் பல்வேறு முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனால், அனைத்து குழந்தைகளும் படிப்பதற்கான சிறந்த இடமாக அரசுப் பள்ளிகள் மாறி வருகிறது. பெற்றோர்கள் பலரும் அரசுப் பள்ளிகளில் தங்கள் பிள்ளைகளை சேர்த்து வருகின்றனர். இந்நிலையில், பள்ளிகளில் பயிலும் 3, 6, மற்றும் 9ஆம் வகுப்பு மாணவர்களின் கற்றல் திறனை அளவிட எஸ்இஏஎஸ் என்ற திறனறி தேர்வு நடத்தப்பட உள்ளது. இந்த தேர்வை நவம்பர் 2ஆம் தேதி நடத்த பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. இந்த தேர்வை 7.42 லட்சம் மாணவர்கள் எழுத இருக்கின்றனர். இந்த தேர்வுக்காக 20 பள்ளிகளுக்கு ஒருவர் வீதம் 1,356 பேர் வட்டார ஒருங்கிணைப்பாளர்களாக நியமிக்கப்பட உள்ளனர். இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் மேற்கொள்ள இருக்கின்றனர்.