• Mon. Mar 17th, 2025

தொழில் நுட்பங்களை அதிகரிக்க, சர்வதேச கருத்தரங்கம் – பல்கலைக்கழக துணை வேந்தர் சந்திரசேகர்..,

Byஜெ.துரை

Oct 8, 2023

சென்னை அரும்பாக்கத்தில் உள்ள வைஷ்ணவா கல்லூரியில் சர்வதேச கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் பல்துறை சார்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட ஆய்வு கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டன. இந்த கருத்தரங்கில் சிறப்பு விருந்தினராக மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் சந்திரசேகர் கலந்து கொண்டார். மேலும் நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர், பேராசிரியர்கள் உள்ளிட்டோர் கருத்தரங்கில் கலந்து கொண்டனர்.

கருத்தரங்கை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக துணை வேந்தர் டாக்டர் சந்திரசேகர் வைஷ்ணவா கல்லூரியில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கம் சிறப்பாக நடைபெற்றதாகவும், இந்த கருத்தரங்கில் அதிகரித்து வரும் சைபர் குற்றங்களுக்கு எதிராக நாம் கண்டுபிடிக்க வேண்டிய தொழில்நுட்பங்கள் குறித்து விவாதிக்கப்பட்டதாகவும் இதன் மூலம் மாணவர்களுக்கு மிகப்பெரிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார். அதிகரித்து வரும் சைபர் கிரைம் குற்றங்களை தடுப்பதற்கான தொழில் நுட்பங்களை அதிகரிக்க வேண்டும், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக துணை வேந்தர் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.