• Mon. Jan 19th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

கண்களைக் கட்டிக் கொண்டே கின்னஸ் சாதனை படைத்த சிறுமி..!

Byவிஷா

Oct 4, 2023

செஸ் விளையாட்டில் சிறுமி ஒருவர் கண்களைக் கட்டிக்கொண்டே கின்னஸ் சாதனை படைத்திருப்பது அனைவரையும் ஆச்சர்யப்படுத்தியிருக்கிறது.
மலேசியாவை சேர்ந்த புனிதமலர் ராஜசேகர் என்ற பத்து வயது சிறுமி தன்னுடைய இரண்டு கண்களையும் கட்டிக்கொண்டு செஸ் காய்களை எந்தவித தவறும் இன்றி சரியாக செஸ் போர்டில் 45.72 நொடிகளில் அடுக்கி வைத்து கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளார். இதன்மூலம் கண்களைக் கட்டிக் கொண்டே அதிவேகமாக செஸ் போர்டை செட் செய்தவர் என்பதற்கான உலக சாதனையை அவர் படைத்துள்ளார். அச்சிறுமி படிக்கும் பள்ளியிலேயே இந்த உலக சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும், அவர் இந்த சாதனையை நிகழ்த்தும் போது அச்சிறுமியின் பெற்றோர் பள்ளி நிர்வாகத்தினர் மற்றும் அச்சிறுமியின் ஆசிரியர்கள் என அனைவரும் அந்த இடத்தில் கூடியிருந்து சிறுமியை ஊக்கப்படுத்தி உள்ளனர்.