• Sat. Sep 27th, 2025
WhatsAppImage2025-09-25at201821
WhatsAppImage2025-09-25at2018203
WhatsAppImage2025-09-25at2018204
WhatsAppImage2025-09-25at2018211
WhatsAppImage2025-09-25at2018202
WhatsAppImage2025-09-25at2018201
WhatsAppImage2025-09-25at2018212
previous arrow
next arrow
Read Now

மன்னாடிமங்கலம் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில், வெங்கடேசன் எம். எல். ஏ பங்கேற்பு..,

ByKalamegam Viswanathan

Oct 3, 2023

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி ஒன்றியம் மன்னாடிமங்கலம் ஊராட்சியில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, கிராம சபை கூட்டம் நடந்தது. இக்கூட்டத்திற்கு சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் எம் எல் ஏ தலைமை தாங்கினார். கிராம மக்கள் குடிநீர் வசதி,ரோடு வசதி, கழிப்பறை வசதி,பஸ் வசதி உட்பட கிராம மக்களின் அடிப்படை வசதி குறித்து பேசினார்கள். இதுகுறித்து வெங்கடேசன் எம். எல். ஏ. அந்தந்த அதிகாரியிடம் கிராம மக்கள் குறைகளை சரிசெய்ய உத்தரவிட்டார். இதில் மாவட்ட வழங்கல் அதிகாரி முருகவள்ளி, தாசில்தார் மூர்த்தி, மண்டல துணை தாசில்தார் வருவாய் அலுவலர் சதீஷ், கிராம நிர்வாக அலுவலர் வெங்கடேசன், அரசு போக்குவரத்துக் கழக இன்ஜினியர் மூர்த்தி, வனத்துறை, சுகாதாரத்துறை, கல்வித்துறை உட்பட பல்வேறு துறையைச் சேர்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர். ஊராட்சி மன்ற தலைவர் பவுன்முருகன், ஒன்றிய கவுன்சிலர் ரேகாவீரபாண்டி, துணைத்தலைவர் பாக்கியம்செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் கதிரவன் மன்னாடிமங்கலம் ஊராட்சியில் நடந்த மற்றும் நடைபெற உள்ள திட்டப் பணிகள் குறித்து எடுத்து பேசினார். ஊராட்சி செயலாளர் திருச்செந்தில் அறிக்கை வாசித்தார். இதே போல் காடுபட்டி ஊராட்சியில் தலைவர் ஆனந்தன் தலைமையில், முள்ளிப்பள்ளம் ஊராட்சியில் தலைவர் பழனிவேல் தலைமையில், துணைத் தலைவர் கேபிள் ராஜா முன்னிலையில், கிராம சபை கூட்டம் நடைபெற்றது ஊராட்சி செயலாளர் மனோபாரதி அறிக்கை வாசித்தார் தென்கரை ஊராட்சியில் தலைவர் மஞ்சுளா ஐயப்பன் தலைமையில், துணைத் தலைவர் கிருஷ்ணன் முன்னிலையிலும் திருவாலவாயநல்லூர் ஊராட்சியில் தலைவர் சகுபர்சாதிக் தலைமையில், மேலக்கால் ஊராட்சியில் தலைவர் முருகேஸ்வரிவீரபத்திரன் தலைமையில், துணைத் தலைவர் சித்தாண்டி முன்னிலையில் கிராம சபை கூட்டம் நடந்தது. ஊராட்சி செயலாளர் விக்னேஷ் அறிக்கை வாசித்தார் அந்தந்த ஊராட்சியில் ஊராட்சி செயலாளர் அறிக்கை வாசித்தனர்.