• Wed. Feb 4th, 2026
WhatsAppImage2026-01-31at0134274
previous arrow
next arrow
Read Now

மதுரை போடி லைன் பகுதியில் மீண்டும் பரபரப்பு…

ByKalamegam Viswanathan

Sep 14, 2023

மதுரை ரயில் நிலையம் அருகே காலியாக இருந்த ரயில் பெட்டியை நிறுத்த கொண்டு சென்ற போது, தண்டவாளத்திலிருந்து, தடம் விலகியது.

கோவையில் இருந்து மதுரை வந்த பயணிகளை இறக்கி விட்டு பணிமனைக்கு
காலியாக பெட்டியை போடி லைன் பகுதியில் நிறுத்தி வைப்பதற்காக கொண்டு வந்த போது, தண்டவாளத்தில் இருந்து தடம் விலகியுள்ளது.
பெட்டி மீண்டும் தண்டவாளத்தில் பொறுத்தும் பணிகள் நடைபெறுகிறது.
இதனால், ரயில் போக்குவரத்தில் எந்த மாற்றமும் இல்லை. என, ரயில்வே வட்டாரங்கள் தெரிவித்தன. கடந்த சில தினங்களுக்கு முன்பு தான் போடி லைன் பகுதியில், இதேபோல், நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரயில் பெட்டியில் ஏற்பட்ட தீ விபத்தால், 9 பேர் இறந்தனர். தற்போது, ரயில் பெட்டி தடம் விலகியதால், மீண்டும் பரபரப்பு ஏற்பட்டது.