• Tue. Dec 9th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

பொங்கல் பண்டிகைக்கு நாளை முதல் ரயில் டிக்கெட் முன்பதிவு ஆரம்பம்..!

Byவிஷா

Sep 12, 2023

அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகை வருவதையொட்டி, ரயில்களில் நாளை முதல் முன்பதிவு ஆரம்பமாக உள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி, பொங்கல் பண்டிகை காலங்களில் பொதுமக்களின் வசதிக்காக 120 நாட்களுக்கு முன்பாகவே ரெயில் டிக்கெட் முன்பதிவு தொடங்கும். அந்த வகையில் அடுத்த ஆண்டு ஜனவரி 14-ம் தேதி (ஞாயிறு) போகி பண்டிகை தொடங்கி, ஜனவரி 15-ம் தேதி பொங்கல், 16-ம் தேதி மாட்டுப்பொங்கல் 17-ம் தேதி காணும் பொங்கல் கொண்டாடப்படுகிறது.
இந்த நிலையில், பொங்கல் பண்டிகையையொட்டி நாளை (புதன்கிழமை) முதல் விரைவு ரெயில்களில் டிக்கெட் முன்பதிவு தொடங்குகிறது. ஐ.ஆர்.சி.டி.சி., இணையதளம் வாயிலாகவும், டிக்கெட் முன்பதிவு மையங்களிலும் டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
டிக்கெட் முன்பதிவு விவரம்:-
செப்டம்பர் 13-ம் முன்பதிவு செய்வோர் ஜனவரி 11 ஆம் தேதி பயணம் செய்து கொள்ளலாம்.
செப்டம்பர் 14-ம் தேதி முன்பதிவு செய்வோர் ஜனவரி 12ஆம் தேதி பயணம் செய்து கொள்ளலாம்.
முன்பதிவு செய்வோர் ஜனவரி 13ஆம் தேதி பயணம் செய்து கொள்ளலாம் செப்டம்பர் 16-ம் தேதி முன்பதிவு செய்வோர் ஜனவரி 14-ஆம் தேதி பயணம் செய்து கொள்ளலாம்
செப்டம்பர் 17-ம் தேதி முன்பதிவு செய்வோர் ஜனவரி 15ஆம் தேதி பயணம் செய்து கொள்ளலாம்
செப்டம்பர் 18-ம் தேதி முன்பதிவு செய்வோர் ஜனவரி 16ஆம் தேதி பயணம் செய்து கொள்ளலாம்.
செப்டம்பர் 19-ம் தேதி முன்பதிவு செய்வோர், ஜனவரி 17ஆம் தேதி பயணம் செய்து கொள்ளலாம் என ரெயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.