• Sun. Oct 26th, 2025
WhatsAppImage2025-10-23at221255
WhatsAppImage2025-10-23at2213003
WhatsAppImage2025-10-23at221300
WhatsAppImage2025-10-23at2213004
WhatsAppImage2025-10-23at2213002
WhatsAppImage2025-10-23at221253
WhatsAppImage2025-10-23at221250
WhatsAppImage2025-10-23at2213001
WhatsAppImage2025-10-23at221249
WhatsAppImage2025-10-23at221252
WhatsAppImage2025-10-23at2213005
WhatsAppImage2025-10-23at2213006
WhatsAppImage2025-10-23at221251
previous arrow
next arrow
Read Now

அ.இ.அ.தி.மு.க தேர்தலில் தோற்கவில்லை ஆர்.பி.உதயகுமார் பேச்சு.

Byadmin

Jul 8, 2021

நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் நாம் தோல்வி அடையவில்லை 1,98,369 வாக்குகளில் வெற்றி வாய்ப்பை நழுவ விட்டோம்

புதிய இளம் வாக்காளர்கள் 65 சதவீதம் பேர் கழகத்திற்கு வாக்களித்துள்ளனர்

முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஆதாரத்துடன் பேச்சு

மதுரை நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் நாம் தோல்வி அடையவில்லை 1,98,369 வாக்குகளில் வெற்றி வாய்ப்பை நழுவ விட்டோம்
புதிய இளம் வாக்காளர்கள் 65 சதவீதம் பேர் கழகத்திற்கு வாக்களித்துள்ளனர் என்று முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் புள்ளி விவரத்துடன் பேசினார்

மதுரை புறநகர் மேற்கு மாவட்ட இளைஞர் இளம்பெண் பாசறை சார்பில் ஆலோசனைக் கூட்டம் அம்மா கோவிலில் நடைபெற்றது இதற்கு மாவட்ட இளைஞர் பாசறை செயலாளர் எம்.ஆர்யா தலைமை தாங்கினார் முன்னாள் அமைச்சரும், மதுரை புறநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளர் ஆர் பி உதயகுமார் ஆலோசனை வழங்கினார் மற்றும் இந்த கூட்டத்தில் மாநில அம்மா பேரவை துணைச் செயலாளர் வெற்றிவேல், ஒன்றிய கழக செயலாளர்கள் அன்பழகன், ராமசாமி, மாவட்ட அணி நிர்வாகிகள் தமிழழகன், சிங்கராஜ பாண்டியன், ஜாகங்கீர் மற்றும் பேரூர் கழக செயலாளர்கள் நெடுமாறன், பாலசுப்ரமணியன்,கொரியர் கணேசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்

ஆர் பி உதயகுமார் பேசியதாவது

கழகத்திற்கு புதிய ரத்தம் பாய்ச்சும் வகையில் புரட்சித்தலைவி அம்மா இளைஞர் இளம்பெண்கள் பாசறை உருவாக்கினார் அதன் மூலம் கடந்த 2011 சட்டமன்ற தேர்தலில் 35 லட்சம் இளைஞர்கள் கழகத்திற்காக வாக்களித்தனர்

அதுமட்டுமல்லாது புரட்சித்தலைவி அம்மா தொலைநோக்கு திட்டத்துடன் மடிக்கணினி திட்டத்தை கொண்டு வந்தார்கள் இதன்மூலம் 53 லட்சம் மாணவர்கள் பயன் அடைந்தார்கள் இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சி உருவாக்கினார்

அதனை தொடர்ந்து
2015 ஆம் ஆண்டு புரட்சிதலைவி அம்மா உலக தொழில் முதலீட்டாளர் மாநாட்டை நடத்தி அதன் மூலம் 2,42,160 கோடி முதலீட்டை ஈர்த்து அதன் மூலம் 4.70 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் வண்ணம் ஒப்பந்தம் போடப்பட்டார்கள் இந்த ஐந்து ஆண்டுகள் மட்டும் இதில் 72 திட்டப்பணிகள் செயல்பட்டு அதன்மூலம் 73,711கோடி மூதலீட்டில் இன்றைக்கு 1.80 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உறுதி அளிக்கப்பட்டது

அதனை தொடர்ந்து அம்மா வழியில் 2019ஆம் ஆண்டு எடப்பாடியார் இரண்டாம் உலக தொழில் மூதலீட்டார்கள் மாநாட்டை நடத்தினார்கள் இதன்மூலம் மூன்று லட்சம் கோடி முதலீட்டை ஈர்த்துத்து 11 லட்சம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்க ஒப்பந்தம் போடப்பட்டது இந்த ஓராண்டில் மட்டும் 24,492 கோடி முதலீட்டின் மூலம் 1,10,844 இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உறுதிபடுத்தினார்

மேலும் அமெரிக்கா, லண்டன், துபாய் போன்ற நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அதன் மூலம் 8,835 கோடி தொழில் முதலீட்டைஈர்த்தார் கொரோனா காலத்தில் 60,674 கோடியில் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்தார் மும்பையை சேர்ந்த ஒரு நிறுவனம் இந்தியாவிலேயே தொழில் முதலீட்டை ஈர்ப்பது தமிழகம் என்று ஆய்வு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது

கொரோனா காலகட்டத்தில் ஆன்லைன் வகுப்புகள் நடைபெறுகிறது இதனைதொடர்ந்து 2 லட்சம் அரசு பள்ளி மாணவர்களுக்கு 2ஜி டேட்டாவை எடப்பாடியார் வழங்கினார் அதற்கு உறுதுணையாக ஓபிஎஸ் இருந்தார்

கடந்த சட்டமன்ற தேர்தலில் கூட வீட்டில் ஒருவருக்கு அரசு வேலை என்று அதிமுகஅறிக்கையாக இளைஞர் நலனை முன்னிறுத்தி கழக ஒருங்கிணைப்பாளர்கள் அறிவித்தார்கள் இன்றைக்கு மத்திய அரசில் கூட இளைஞர்களுக்கு மந்திரி பதவிக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது இதன் மூலம் இன்றைக்கு இளைஞர்கள் புதிய சக்தியாக விளங்க போகிறார்கள
ஆனால் இளைஞர்கள் வளர்ச்சிக்கு எதுவும் செய்யாததால் தான் காங்கிரஸ் கட்சி இன்றைக்கு கரைந்து போய் உள்ளது

காங்கிரஸ் திமுக ஆட்சி காலத்தில் தான் கச்சத்தீவு தாரை வார்க்கப்பட்டது அதை மீட்க அம்மா சட்டப் போராட்டம் நடத்தினார் அதனைத் தொடர்ந்து அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் வருவாய்த் துறையும் அதில் சேர்க்கப்பட்டது

காவிரி பிரச்சினையில் மாபெரும் சட்டப்போராட்டம் நடத்தி அம்மா வழியில் காவிரி ஆணையத்தை எடப்பாடியார் அமைத்துத் தந்தார் அவருக்கு உறுதுணையாக ஒபிஎஸ் இருந்தார் முல்லைப் பெரியாறு அணைக்காக திமுக முதலில் கண்டன ஆர்ப்பாட்டம் என்று கூறிவாபஸ் பெற்றார்கள் அதன் பின் உண்ணாவிரதம்
என்று கூறி வாபஸ் பெற்றார்கள் ஆனால் புரட்சி தலைவி அம்மா மாபெரும் சட்டம் போராட்டம் நடத்தி முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டத்தை 136 அடியிலிருந்து 142 அடியாக உயர்த்தி காட்டினார்கள்

தமிழ் இனம், மொழி, உரிமைக்காக போராடி வெற்றி பெற்றதுஅதிமுகவா திமுகவா என்றுஎடைபோட்டு பார்த்தால் அதில் தீர்க்கதரிசனமாக அனைத்து உரிமைகளும் போராடி வெற்றி பெற்று தந்தது அதிமுக தான் என்று நாட்டு மக்கள் கூறுவார்கள்

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் நாம் 18.48 வாக்கு சதவீதம் பெற்றோம் ஆனால் திமுக 32.76 சதவீதம் வாக்கு பெற்றது தற்போது நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் நாம் 33.29 வாக்கு சதவீத பெற்றோர் ஆனால் திமுக 36.30சகவீதம் பெற்றது
3 சதவீத வாக்கு என்பது சில இடங்களில் திமுக கூடுதலாக வாக்கு பெற்றதை கூறியுள்ளனர்

ஆனால் 43 தொகுதிகளில் 1,98.369 வாக்குகள் பெற்று இருந்தால். இன்றைக்கு நாம் ஆட்சி அமைத்து இருப்போம் நாம் தோல்வி அடையவில்லை நாம் வெற்றியை நழுவ விட்டோம் குறிப்பாக சென்னை டி.நகரில் 131 வாக்குகள் தென்காசியில் 370 வாக்குகள் காட்பாடியில் 746 வாக்குகள் இப்படி குறைந்த அளவில் வாக்கு வித்தியாசத்தில் வெற்றியை நழுவ விட்டோம்

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில்18 வயது உள்ள புதிய இளம் வாக்காளர்கள் 8,97,000 பேர் வாக்களித்துள்ளனர் இவர்களில் 65 சதவீதம் பேர் நமக்கு வாக்களித்துள்ளனர் அதேபோல் 25 வயது முதல் 30 வயது வரை உள்ள இளைஞர்கள் 67 சதவீதம் பேர் நமக்கு வாக்களித்துள்ளார்கள் என்று அரசியல் வல்லுனர்கள் கூறுகின்றனர்

தொண்டர்களால் ஒரு இயக்கத்தை வழி நடத்த முடியும் என்ற வரலாற்றை எடப்பாடியாரும்,ஒபிஎஸ்சும் இன்றைக்கு உலக அளவில் சாதித்துக் காட்டியுள்ளனர் தொண்டர்கள் இந்த இயக்கத்தை சொந்தம் கொண்டாட முடியும் என்ற வரலாற்றை இன்றைக்கு இந்த இருபெரும் தலைவர்களும் உருவாகி கொடுத்துள்ளார்கள்

இப்படிப்பட்ட பெருமை தேடித்தந்த இந்த இரு பெரும் தலைவர்களுக்கு நாம் எப்போதும் நன்றிக்கடன் பட்டுள்ளோம் நீஙகள் தொடர்ந்து அம்மா அரசு செய்த சாதனைகளை கிராமமக்கள் எடுத்துரையுங்கள் எதிர்க்கட்சி என்பது நிரந்தரமல்ல ஆளுங்கட்சி என்பது நிரந்தரமல்ல நிச்சயம் மக்கள் நம்மை ஆளும் கட்சியாக அமர்த்துவார்கள் என்று அவர் பேசினார்