• Sun. Aug 30th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

தமிழகத்தில் வெண்டைக்காய் விலை கடும் வீழ்ச்சி..!

Byவிஷா

Sep 2, 2023

தமிழகத்தில் வெண்டைக்காய் விலை கடும் வீழ்ச்சி அடைந்துள்ளதால், விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
திருப்பத்தூர் மாவட்டம் மாணவள்ளி கிராமத்தை சேர்ந்த ரமேஷ் (35) என்ற விவசாயி வெண்டைக்காய் பயிர் செய்து வருகிறார். மேலும் சுற்றுவட்டார விவசாயிகளிடம் வெண்டைக்காய் கொள்முதல் செய்து பிற நகரங்களில் விற்பனை செய்து வருகிறார். இந்நிலையில் கடந்த சில வாரங்களாக வெண்டைக்காயின் விலை மிகவும் வீழ்ச்சி அடைந்துள்ளது. அதாவது கிலோ 2 ரூபாய் அளவுக்கு விலை குறைந்துள்ளது. இதனால் கார் வாடகை கூட கிடைக்கவில்லை. எனவே விரக்தி அடைந்த ரமேஷ் 5,000 கிலோ வெண்டைக்காயை ஏரியில் கொட்டினார்.
வியாபாரிகள் யாரும் வெண்டைக்காய் வாங்க முன் வராததால், வேறு வழி இல்லாமல் அவற்றை ஏரியில் கொட்டியதாக அவர் கூறியுள்ளார். இதே நிலை நீடித்தால் விவசாயிகள் எந்த பயிரும் பயிரிடமாட்டார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார். எனவே அரசு உடனடியாக வெண்டைக்காய் உள்ளிட்ட காய்கறிகளை கொள்முதல் செய்து ரேஷன் கடைகள் மூலம் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.