• Fri. Nov 21st, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

குரூப் 4 தேர்வில் தேர்வான பணிகளுக்கு.., இரண்டாம் கட்ட கலந்தாய்வு தேதிகள் அறிவிப்பு..!

Byவிஷா

Aug 18, 2023

குரூப் 4 தேர்வில் தேர்வான தட்டச்சர் மற்றும் சுருக்கெழுத்தர் பணிகளுக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு நடைபெறும் தேதிகளை டி.என்.பி.எஸ்.ஸி வெளியிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் அரசு துறைகளில் காலியாக இருக்கும் பணியிடங்கள் டிஎன்பிஎஸ்சி மூலம் நிரப்பப்பட்டு வருகிறது. அந்த வகையில் கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர், குறுக்கெழுத்து தட்டச்சர், தண்டலர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் குரூப் 4 தேர்வு மூலம் ஆட்களை தேர்வு செய்து வருகிறது. இதற்கான குரூப் 4 தேர்வு கடந்த 2022ம் ஆண்டு நடத்தப்பட்டது. காலியாக உள்ள 7301 இடங்களை நிரப்புவதற்கான தேர்வை, 2022 ஜூலை 24ஆம் தேதி தேர்வு நடைபெற்றது. இதில் 18.6 லட்சம் பேர் கலந்து கொண்டனர். இந்த தேர்வு முடிவுகள் கடந்த மார்ச் (2023) மாதம் வெளியிடப்பட்டது. ஆனால், பணியிடங்கள் நிரப்பப்படவில்லை. ஆனால் காலி பணியிடங்களுக்கான எண்ணிக்கை 10,117 ஆக உயர்த்தி டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு வெளியிட்டது.
இதையடுத்து பணியிடங்களுக்கு தகுதி பெற்றவர்களின் பட்டியலை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டது. அதன்படி குரூப் 4 பணியிடங்களுக்கு ஜூலை 20 முதல் ஆகஸ்ட் 10ம் தேதி வரை கலந்தாய்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெற்றது. இந்த நிலையில் குரூப் 4 தேர்வில் அடங்கிய 3,373 தட்டச்சர் பதவிக்கான மூலச் சான்றிதழ்கள் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு வரும் 21ம் தேதி முதல் அடுத்த மாதம் 11ம் தேதி வரை நடைபெற உள்ளதாக அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.
1079 சுருக்கெழுத்துத் தட்டச்சர் பதவிக்கான சான்றிதழ்கள் சரிபார்ப்பு, கலந்தாய்வு வரும் நவ.20 முதல் 26ம் தேதி வரை நடைபெறுகிறது; முதல் கலந்தாய்வில் காலியாக ஏயுழு உள்ளிட்ட 47 பதவிகள் இதில் நிரப்பப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.