• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

வணிக நிறுவனங்களின் பெயர் பலகைகளில் தமிழ் கட்டாயம்..!

Byவிஷா

Aug 17, 2023
தமிழகத்தில் உள்ள அனைத்து வணிக நிறுவனங்களின் பெயர் பலகைகளிலும் தமிழ் மொழி கட்டாயம் இடம் பெற்றிருக்க வேண்டும் என அமைச்சர் சாமிநாதன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் புதிதாக நிறுவப்பட்டுள்ள டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி அம்மையார் சிலையை அமைச்சர் சாமிநாதன் இன்று ஆய்வு செய்தார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்.., 
தமிழகத்தில் உள்ள அனைத்து வணிக நிறுவனங்களின் பெயர் பலகையில் கட்டாயம் தமிழ் மொழி இருக்க வேண்டும் என்றும் தமிழ் பெயர் பலகை வைக்காத வணிக நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் தமிழக அரசு அலுவலகங்களில் அலுவலர்கள் அனைவரும் தமிழில் கையெழுத்திட வேண்டும் என அரசாணை வெளியிடப்பட்டுள்ள நிலையில் இந்த உத்தரவை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.