• Wed. Nov 19th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

விபத்துக்கள் அதிகம் நடக்கும் மதுரை திருநகரில் உள்ள சாலைகளை அரசு அதிகாரிகள் மற்றும் காவல் துறையினர் ஆய்வு…

ByKalamegam Viswanathan

Aug 3, 2023

விபத்துகளை குறைப்பதற்காக, விபத்துக்கள் அதிகம் நடக்கும் மதுரை திருநகரில் உள்ள சாலைகளை அரசு அதிகாரிகள் மற்றும் காவல் துறையினர் ஆய்வு மேற்கொண்டனர்.

உலகத்தில் விபத்துக்கள் அதிகம் நடப்பதில் இந்தியா இரண்டாம் இடமும், இந்தியாவில் அதிக  விபத்துக்கள் நடக்கும் மாநிலத்தில் தமிழகம் முதலிடமும் தொடர்ந்து பெற்று வருகிறது. விபத்துக்களை குறைப்பதற்காக தமிழக அரசு பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில் இன்று தமிழகத்தில் பல்வேறு இடங்களில் அதிகம் நடக்கும்  விபத்துகளை குறைப்பதற்காக தமிழக அரசின் வழிகாட்டுதலின்படி ஃபீல்டு சர்வே மூலம் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழக அரசு ஆய்வு மேற்கொள்ளும் இடத்தில் மருத்துவ பேராசிரியர், கிராம நிர்வாக அலுவலர் மற்றும் போக்குவரத்து குற்றப்பிரிவு காவல் துறையினர் ஆய்வு செய்யும் இடத்தில் விபத்து குறைப்பதற்காக என்னென்ன முயற்சிகள் எடுக்க வேண்டும் என்று தமிழக அரசின் திட்ட அறிக்கையில் பதிவிடப்பட்டிருந்தது.

இந்த ஆய்வு குறித்து விபத்துக்களை குறைப்பதற்காக திருநகரில் உள்ள சாலையை அளவெடுத்து, தொடர்ந்து விபத்துகளை குறைப்பதற்காக  சாலையில் என்னவெல்லாம் மேற்கொள்ள வேண்டும் என்று மருத்துவ குழு அதிகாரிகள் மற்றும் போக்குவரத்து காவல்துறையினர் ஆய்வு மேற்கொண்டனர்.

இந்த ஆய்வில்  வேலம்மாள் கல்லூரி பேராசிரியர் யுவராஜ், வாடிப்பட்டி வருவாய் ஆய்வாளர் பாஸ்கரன்,  கிராம நிர்வாக அலுவலர் பரமசிவம் மற்றும் போக்குவரத்து காவல் ஆய்வாளர் கணேஷ் ராம், விபத்துக்கள் ஆகியோர் குழு கலந்து கொண்டு திருநகரில் உள்ள விபத்துக்கள் அதிகம் நடக்கும் சாலையை ஆய்வு மேற்கொண்டனர்.