• Mon. Sep 7th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

பெங்களூரில் இன்று எதிர்க்கட்சிகள் ஆலோசனைக் கூட்டம்..!

Byவிஷா

Jul 17, 2023

பெங்களூரில் இன்றும் நாளையும் எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டம் காங்கிரஸ் கட்சி தலைமையில் நடைபெற உள்ளது. இதில் கலந்துகொள்ள திமுக உள்பட 24கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
2024 லோக்சபா தேர்தல் தொடர்பான எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டம் இன்று மாலை தொடங்கி நாளை வரை பெங்களூருவில் நடைபெறுகிறது. இதில் கலந்துகொள்ள அனைத்து எதிர்க்கட்சிகளுக்கும், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா அழைப்பு விடுத்துள்ளார். தற்போதைய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் 24 எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இன்று மாலை பெங்களூரில் தொடங்கும் ஆலோசனை கூட்டம் நாளையும் நடைபெறுகிறது. இதில், காங்கிரஸ் திமுக, ஆம்ஆத்மி, திரிணாமுல் காங்கிரஸ் உள்பட மொத்தம் 24 கட்சிகளின் தலைவர்கள் பெங்களூரில் சந்திக்க உள்ளனர்.