• Wed. Jan 21st, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

சேலம் அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் கண்ணாடி உடைத்து உள்ளே சென்றதால் பரபரப்பு…

சேலம் அரசு மருத்துவமனையில் தண்டுவடம் பாதிக்கப்பட்ட ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த கூலி தொழிலாளிக்கு உரிய சிகிச்சை வழங்காததால், உறவினர்கள் அவசர சிகிச்சை பிரிவின் கண்ணாடி உடைத்துக் கொண்டு உள்ளே சென்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டம் சீரங்கபாளையம் மாரியம்மன் கோவில் பகுதியை சேர்ந்தவர் குமார். மீன்பிடி தொழிலாளியான இவர் கடந்த திங்கட்கிழமை மாலை வீட்டிற்கு செல்வதற்காக பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருக்கும் பொழுது, அதிவேகமாக வந்த ஆட்டோ மோதியதில் முதுகு தண்டுவட பகுதியில் பலத்த காயமடைந்த குமார், ஈரோடு அரசு மருத்துமனை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து பவானி காவல்நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில் மேல் சிகிச்சைக்காக குமாரை சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவருக்கு, மருத்துவமனையில் உரிய சிகிச்சை வழங்கப்படாததால் ஆத்திரமடைந்த உறவினர் அவசர சிகிச்சை பிரிவிற்கு நுழைந்து கண்ணாடியை உடைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து அரசு மருத்துவமனை காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இது குறித்து அவர் கூறும்போது மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்தோம். ஆனால், உரிய சிகிச்சை வழங்காமல் மருத்துவமனை நிர்வாகம் காலம் தாழ்த்தி வருவதாக குற்றச்சாட்டை முன் வைத்தனர்.