மதுரை மாவட்டம் திருமங்கலம் வட்டாட்சியர் அலுவலகத்தை திருமங்கலம் தாலுகாவை சுற்றியுள்ள 79 பார்வையற்றோர் திடீரென முற்றுகையிட்டனர்.
தங்களுக்கு தமிழக அரசின் இலவச வீட்டுமனை பட்டாவை அந்தந்த தாலுகாவில் பிரித்து கொடுப்பதற்கு பதிலாக, மதுரை மாவட்டத்தில் உள்ள 500க்கும் மேற்பட்ட பார்வையற்றோருக்கு ஒரே இடத்தில் வீட்டுமனை பட்டாவை வழங்க வேண்டும் எனவும், அவ்வாறு ஒவ்வொரு தாலுகாவிற்கும் பிரித்துக் கொடுப்பதால், ஆங்காங்கே பார்வையற்றோர் பிரிந்து செல்வதுடன் தாங்கள் செய்யும் தொழிலுக்கு இடையூறாக இருக்கும் எனவும், போதிய வசதிகள் கிடைப்பதில்லை எனவும் புகார் தெரிவித்தனர்.
இப்புகார் அடங்கிய மனுவினை திருமங்கலம் வட்டாட்சியரிடம் அளித்துச் சென்றனர். மாவட்ட ஆட்சியரிடம் பரிந்துரை செய்து உரிய நடவடிக்கை எடுப்பதாக வட்டாட்சியர் தெரிவித்துள்ளார்..














; ?>)
; ?>)
; ?>)