• Thu. Jan 22nd, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

மதுரையில் ஓய்வுபெற்ற அரசு மருத்துவர் வீட்டில் நகை திருடிய ஓட்டுநர் கைது..!

Byவிஷா

Jul 3, 2023

மதுரை மாவட்டம், மதுரையில் ஓய்வுபெற்ற அரசு மருத்துவர் வீட்டில் 32சவரன் நகைகளை திருடிய ஓட்டுநர் கைது செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை எல்லீஸ்நகரை சேர்ந்தவர் நாராயணன். இவர் அரசு மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரிடம் கார் ஓட்டுநராக தத்தனேரியை சேர்ந்த ஜெயராமன் என்பவர் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் நாராயணன் பீரோவில் வைத்திருந்த 32 சவரன் தங்க செயின்கள் சவரன் மதிப்புடைய தங்க பொருட்களை திருடு போயுள்ளது. இதனைத்தொடர்ந்து வீட்டின் இருந்த சிசிடிவி காட்சிகளை சோதனை செய்த ஓட்டுநர் ஜெயராமன் நகைகளை திருடியது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து நாரயணன் கொடுத்த புகாரின் பேரில் எஸ்எஸ்.காலனி காவல்துறையினர் ஓட்டுநர் ஜெயராமனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.