

மதுரை அருகே உள்ள சேது பொறியியல் கல்லூரியின் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான துவக்க விழா இன்று துவங்கப்பட்டது.
கல்லூரியின் 29 ஆவது ஆண்டு துவக்க விழாவும் 23- 24 கல்வியாண்டுக்கான நிர்வாக ஒதுக்கீட்டில் சேர்ந்த முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான துவக்க விழா இன்று சேது பொறியியல் கல்லூரியில் துவங்கப்பட்டது. துவக்க விழாவிற்கு கல்லூரி தலைவர் மற்றும் நிறுவனர் முகமது ஜலில் அவர்கள் தலைமை தாங்கினார் கல்லூரி நிர்வாக அதிகாரிகள் சீனி முகைதீன் சீனி முகமது அலி யார், நிலோபர் பாத்திமா ,நாசியா பாத்திமா முன்னிலை வகுத்தனர். சிறப்பு விருந்தினராக கத்தார் தொழிலதிபர் பொறியாளர் மகாதேவன் மற்றும் அவரது துணைவியார் கோகுல் ஷர்மிளா அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரை வழங்கினார்கள்.
தொழிலதிபர் பொறியாளர் மகாதேவன் அவர்கள் பேசுகையில்..,
மாணவர்கள் தங்களிடம் நம்பிக்கை திறனையும், திறமையும், வாய்ப்புகளையும் தகுந்தவாறு பயன்படுத்தினால் வாழ்க்கையில் சிறந்த இடத்தை அடையலாம் மற்றும் தங்களது வாழ்க்கையை முதல் 25 ல் கல்வியும் இரண்டாவது 25 ல் உழைப்பும் மூன்றாவது 25ல் வாய்ப்புகளையும் சரியாகப் பயன்படுத்தினால், நான்காவது 25 சிறப்பாக இருக்கும் என்று பேசினார்.
ஆசிரியர்களும் பெற்றோர்களும் சேர்ந்தால்தான் ஒரு மாணவனை சிறந்த குடிமகனாக சமுதாயத்திற்கு ஏற்றவாறு உருவாக்க முடியும் என்றும் மாணவர்கள் பெற்றோர்களிடம் எதையும் மறைக்காமல் உண்மையாக இருக்க வேண்டும் என்றும் இதனால் அவர்கள் எடுக்கும் முடிவுகளுக்கு சிறப்பு உண்டாகும் என்று பேசினார்.
இதனையடுத்து தொழிலதிபரின் துணைவியார் கோகுல் சர்மிலியா தன்னுடைய அனுபவத்தை மாணவர்களிடம் பகிர்ந்து கொண்டார். கல்லூரி நிறுவனர் தலைவர் முகமது ஜலில் அவர்கள் கல்லூரி உலக அளவில் இடம்பெறுவதற்கான முயற்சிகளை தான் மேற்கொண்டு உள்ளதாகவும் மாணவர்கள் முதலாம் ஆண்டு முதல் ஆராய்ச்சிகளில் ஈடுபட வேண்டும் என்றும் மனதை சுத்தமாக வைத்துக் கொள்ள புத்தகங்களை படிக்க வேண்டும் என்றும் பேசினார். முதல்வர் செந்தில்குமார் வாழ்த்துரை வழங்கினார். நிர்வாக இயக்குனர் நிலோபர் பாத்திமா வரவேற்புரை வழங்க முதலாம் ஆண்டு டீன் ஜான்சி ராணி நன்றி உரை வழங்கினார். துவக்க விழாவில் கணினி துறை சார்ந்த படிப்புக்கான துவக்க விழா காலையும் இயந்திரவியல், மின்னியல், பயோ மெடிக்கல் மின்னணுவியல் பயோடெக், அக்ரி, சிவில் கெமிக்கல் பொறியியல் துறைகளுக்கு மதியம் துவக்க விழா நடத்தப்பட்டது. இதில் பெற்றோர்கள் மாணவர்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர் விழா ஏற்பாட்டை முதலாம் ஆண்டு துறை தலைவர்கள் பேராசிரியர்கள் செய்திருந்தனர்.
