• Fri. Sep 12th, 2025
WhatsAppImage2025-09-12at0142046
WhatsAppImage2025-09-12at0142042
WhatsAppImage2025-09-12at014204
WhatsAppImage2025-09-12at0142041
WhatsAppImage2025-09-12at0142045
WhatsAppImage2025-09-12at0142047
WhatsAppImage2025-09-12at0142048
WhatsAppImage2025-09-12at0142044
WhatsAppImage2025-09-12at0142043
previous arrow
next arrow
Read Now

தலையணையில் தூங்கிக் கொண்டிருக்கிறது மதுரை மெட்ரோ திட்டம்.., ஆவேசப்படும் ஆர்.பி.உதயகுமார் !

கூட்டு குடிநீர் திட்டப்பணிகள், மேம்பால பணிகள், மதுரை மெட்ரோ ரயில் திட்டப்பணிகள் கிணற்றில் போட்ட கல்லாக கிடப்பதாக வேதனை அடைகிறேன் என சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவர் ஆர்.பி.உதயகுமார் ஆவேசத்தோடு செய்தியை வெளியிட்டு இருக்கிறார்.

தென் தமிழக தலைநகரமான, மதுரைக்கு மெட்ரோ ரயில் திட்டம் கொண்டு வருவேன் என்று எடப்பாடியார் தேர்தல் பிரச்சாரத்தில் கூறினார். 

தற்போது 8,500 கோடியில் செயல்படுத்தப்படும் மெட்ரோ ரயில் திட்டத்திற்கு, 20 சதவீதம் மத்திய அரசு பங்கும், 20 சதவீதம் மாநில அரசு பங்கும், 60 சதவீத நிதி உதவியுடன் நடைபெறுவதாக கூறப்பட்டுள்ளது .

பல்வேறு இடங்களில் மண் பரிசோதனை செய்யப்பட்டதாகவும், திருமங்கலத்தில் இருந்து ஒத்தக்கடை வரை 31 கிலோமீட்டர் அமைக்கப்பட உள்ளதாகவும், இதில் 21 நிறுத்தங்கள் நிலத்திலும், ஆறு நிறுத்தங்கள் பூமிக்கடியில் அமைக்கப்பட உள்ளது. அதேபோல் வைகை நதிக்கரை நிறுத்தம் பூமிக்கடியில் அமைய உள்ளது என்று கூறப்பட்டு வருகிறது. இதில் மூன்று பெட்டிகள் பொருத்தப்பட்டு 750 முதல் 900 வரை மக்கள் பயணம் செய்யும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது .

இந்த மெட்ரோ ரயில் திட்டத்தில் பூமிக்கு அடியில் அமைக்கும் போது பல்வேறு பழமையான கட்டிடங்கள் உள்ளது அதையெல்லாம் அரசு கவனத்தில் கொள்ள வேண்டும்.

மதுரை நகரின் வளர்ச்சியாக எடப்பாடியார் பல்வேறு பாலங்களை உருவாக்கி தந்தார் போக்குவரத்து நெரிசலை குறைக்க வகையில் பல்வேறு மேம்பாலங்களைக் கட்ட ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. தல்லாகுளம் பகுதியில் உயரமட்ட மேம்பாலம் அமைக்க 110 விதியின் கீழ் அறிவிக்கப்பட்டு நிலம் எடுக்க நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து நீதிமன்றம் சென்றதால் திட்டம் செயல்படுத்த காலஅவகாசம்ஆனது. அதேபோல் யானைகல் பெரியார் இடையே உயர்மட்ட பாலம் அமைக்க முயற்சி எடுக்கப்பட்டது.  அம்மாவை அரசு இருந்திருந்தால் வளர்ச்சியில் சுனக்கம் இருந்திருக்காது. இதே மதுரையில் ஆயிரம் கோடியில் பறக்கும் பாலமும், வைகையில் இருபுறமும் சாலை அமைக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக யானைக்கல் முதல் பெரியார்நிலையம் பகுதி வரை உயிர் மட்ட பாலங்கள் அமைக்கப்படவுள்ளது. அதே இடத்தில் தான் மெட்ரோ திட்டமும் வருகிறது ஒரே இடத்தில் இரு வழித்தடங்களால் குழப்பம் ஏற்படுகிறது இதற்கு உரிய விளக்கம் அரசு வழங்க வேண்டும்.

 மீனாட்சி அம்மன் கோவில் அருகே திட்டம் வருகிறது என்று கூறுகிறார்கள் .மதுரையில் பாரம்பரியமிக்க மாசி வீதிகளில தேர் வரும் இடத்தில்  பூமிக்கு அடியில் அமைக்கும் போது எந்த இடையூறு இல்லாமல் அமைக்கப்பட வேண்டும். தேரோட்டத்திற்கு எந்த இடையூறு இல்லாமல் அமைக்கப்பட வேண்டும் குறிப்பாக உரிய பாதுகாப்பை பார்க்க வேண்டும்.

 மேலும் பூமிக்கு அடியில் அமைக்கும் பொழுது ஏற்கனவே குடிநீர் திட்டப்பணிகள், மின்சார கேபிள் உள்ளிட்டஇணைப்புகளை சரி பார்க்க வேண்டும் .

ஏற்கனவே 520 தேர்தல் வாக்குறுதியை திமுக கொடுத்தது எதையும் நிறைவேற்றாமல் அதைத் திட்டங்கள் எல்லாம் தலையணையில் தூங்கிக் கொண்டிருக்கிறது. அதேபோல் இந்த திட்டத்தை தூங்க விடாமல் செயல்படுத்திட வேண்டும் என கூறினார்.