• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

மாநில அளவில் முதலிடம் பிடித்த மாணவி நந்தினிக்கு.., நடிகர் விஜய் வைர நெக்லஸ் பரிசளித்தார்..!

Byவிஷா

Jun 17, 2023

பிளஸ் 2 பொதுத்தேர்வில், 600க்கு 600 மதிப்பெண்கள் எடுத்து, மாநில அளவில் முதலிடம் பெற்ற மாணவிக்கு, நடிகர் விஜய் வைர நெக்லஸை பரிசாக அளித்தார்.
திண்டுக்கல் நாகல் நகர் பகுதியைச் சேர்ந்தவர் சரவணக்குமார் கூலித் தொழிலாளியான இவரது மூத்த மகள் நந்தினி. அந்தப்பகுதியில் உள்ள அண்ணாமலையார் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார். வணிகவியல் பாடப்பிரிவைத் தேர்வு செய்து படித்த நந்தினி, சமீபத்தில் வெளியான பிளஸ் 2 தேர்வில் தமிழ் உட்பட அனைத்துப் பாடப்பிரிவுகளிலும் சதம் எடுத்து 600க்கு 600 என்ற வரலாற்று சாதனையைப் படைத்துள்ளார். அனைத்து பாடங்களிலும் முழு மதிப்பெண்கள் பெற்ற மாணவி நந்தினிக்கு நடிகர் விஜய் வைர நெக்லஸ் மற்றும் ஊக்கத்தொகையை பரிசாக வழங்கியுள்ளார்.