• Sat. Dec 20th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

உணவு தர பட்டியலில் தமிழ்நாட்டுக்கு எத்தனையாவது இடம்..?

Byவிஷா

Jun 10, 2023

மத்திய அரசு வெளியிட்டுள்ள உணவு தர பட்டியலில் தமிழ்நாட்டுக்கு மூன்றாவது இடம் கிடைத்துள்ளது.
மத்திய அரசு உணவு தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. அப்பட்டியலின்படி தமிழ்நாடு மூன்றாவது இடத்தில் உள்ளது. கேரளா முதலிடத்தையும் பஞ்சாப் இரண்டாம் இடத்தையும் பிடித்துள்ளன.
உணவின் தரம், அளவு, சுவை ஆகியவற்றின் அடிப்படையில் உணவு தரவரிசை பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. மாவட்டங்களுக்கான தரவரிசை பட்டியலில் 231 மாவட்டங்கள் இடம்பெற்றுள்ளன. இதில் 31 மாவட்டங்கள் 25 சதவீதத்திற்கும் அதிகமான மதிப்பெண் பெற்றுள்ளது. தமிழ்நாட்டுக்குள் எடுத்துக் கொண்டால் கோவை மாவட்டம் முதலிடத்தை பிடித்துள்ளது. சென்னை, மதுரை, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்கள் 75 சதவீதத்திற்கும் மேலான மதிப்பெண்களை பெற்றுள்ளது.