• Sat. Sep 26th, 2026
WhatsAppImage2026-09-24at2158321
previous arrow
next arrow
Read Now

ராஜபாளையம் அருகே நிழல்குடை அமைக்க பூமிபூஜை

ByKalamegam Viswanathan

Jun 10, 2023

ராஜபாளையம் அருகே சாத்தூர் சட்டமன்ற தொகுதி உட்பட்ட ஆறு கிராமங்களில் 88 லட்ச ரூபாய் மதிப்பிலான ரேஷன் கடை சிமிண்ட் சாலை நிழல்குடை ஆகிய சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ரகுராமன் பூமி பூஜை செய்தனர்.


விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே சாத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட முறம்பு மில்கேட்.பானங்குளம், கோபாலபுரம், சிவலிங்காபுரம். கொருக்காம்பட்டி . வரகுணராமபுரம், ஆகிய 6 கிராமங்களுக்கு சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் இருந்து 88 லட்சம் மதிப்பிலான நியாயவிலைக்கடை.


நிழல்குடை ,சிமெண்ட் சாலை,உள்ளிட்டவைகளுக்கு சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ரகுராமன் பூமி பூஜை செய்தார். மதிமுக மாவட்டச் செயலாளர் வேல்முருகன் திமுக ஒன்றிய செயலாளர் ஞானதாஸ் , மதிமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் மனோகரன். மற்றும் ஊராட்சி மன்ற தலைவர்கள் மதிமுக கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்..