• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

ஒடிசாவுக்கு விமான டிக்கெட் ரூ.4000 விருந்து ரூ.80,000” மாக அதிகரிப்பு – சு. வெங்கடேசன் எம்.பி ஆவேசம்

ByA.Tamilselvan

Jun 4, 2023

ஒடிசாவில் ஏற்பட்டுள்ள ரயில் விபத்து நேரத்தில் தனியார் விமான நிறுவனங்கள் விமான டிக்கெட் விலையை உயர்த்தியுள்ளதாக மதுரை எம்.பி சு.வெங்கடேசன் டுவிட்.
ஒடிசா மாநிலத்தில் நேற்று முன்தினம் இரவு மூன்று ரயில்களுக்கு இடையே ஏற்பட்ட விபத்தின் காரணமாக தற்போது வரை 288 பேர் இறந்துள்ளதாகத் தகவல் வெளிவந்த நிலையில், 275 இறந்துள்ளதாக ஒடிசா மாநிலத் தலைமைச் செயலர் பிரதீப் ஜனா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.


இந்த ரயில் விபத்துக்கு மத்திய அரசின் அலட்சியமே காரணம் என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. மேலும் மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பதவி விலக வேண்டும் என்றும் குற்றம் சாட்டி வருகின்றனர்.
இந்நிலையில், ஒடிசாவிற்குச் செல்லும் விமானங்களில் பயணச் சீட்டுகளின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “அரசு விமான நிறுவனமான ஏர் இந்தியாவை டாடாவுக்கு விற்ற மோடி அரசே! கொடூரமான ரயில் விபத்தைக் கூட லாப வெறிக்குப் பயன்படுத்தும் தனியார் விமான நிறுவன கொள்ளைக்கு யார் பொறுப்பு? ஒடிசாவுக்கு டிக்கெட் விலை 6 மடங்கு முதல் 20 மடங்கு வரை… 4000 ரூபாய் டிக்கெட் 24,000 முதல் 80,000 ரூபாய் வரை விற்கப்படுகிறது. அரசு விமானம் இருந்தால் “வந்தே பாரத்”என்று கருணை காண்பிக்கலாம் அல்லவா!* கருணை இல்லா அரசே…* உறவினர் பயணக் கட்டணத்தை ஒன்றிய அரசே ஏற்றுக்கொள்!” எனத் தெரிவித்துள்ளார்.