திருப்பரங்குன்றம் வைகாசி திருவிழா கூட்டத்தில் இந்திய நாட்டிற்குள் சட்ட விரோதமாக நுழைந்த வங்காளதேசம் நாட்டைச் சேர்ந்த நபரை போலீசார் கைது செய்தனர்.
திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் நேற்று வைகாசி விசாக திருவிழா நடைபெற்றது.விசாக பால்குட விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் பால்குடம் எடுத்து சாமி தரிசனம் மேற்கொண்டனர்.இந்த நிலையில் திருப்பரங்குன்றம் கோவில் அருகே உள்ள சரவணப் பொய்கையில் சந்தேகப்படும்படி வங்காள மொழியில் ஒருவர் பேசிகொண்டு இருப்பதாக போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில் அங்கு சென்று அவரிடம் விசாரணை மேற்கொண்டதில் வங்காளதேசம் நாட்டில் போக்ரா மாவட்டத்தைச் சேர்ந்த மூசா, கரிமுல்லா (வயது 37) என்பதும் அவரிடம் இந்தியாவிற்குள் நுழைவதற்கான பாஸ்போர்ட், விசா எதுவும் இல்லை என்பதும் தெரிய வந்தது எனவே அவரை திருப்பரங்குன்ற போலீசார் கைது செய்து வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருப்பரங்குன்றத்தில் வங்காளதேசம் நாட்டைச் சேர்ந்தவர் கைது
