• Thu. Sep 11th, 2025
WhatsAppImage2025-08-28at1013221
WhatsAppImage2025-08-28at101324
WhatsAppImage2025-08-28at1013171
WhatsAppImage2025-08-28at101323
WhatsAppImage2025-08-28at101320
WhatsAppImage2025-08-28at101321
WhatsAppImage2025-08-28at101322
WhatsAppImage2025-08-28at101317
WhatsAppImage2025-08-28at1013191
previous arrow
next arrow
Read Now

மதுரையில் முன்னாள் அமைச்சர் ஆதரவாளர் மற்றும் அரசு ஒப்பந்ததாரர் என மோசடி…

Byகுமார்

Oct 18, 2021

மதுரை கே.கே.நகர், எல்.ஐ.சி காலனி பகுதியை சேர்ந்த ஷேக்முகம்மது என்பவர் மதுரை மாவட்ட ஆட்சியரிடம் அளித்த புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.

அதில் கடந்த 2017ஆம் ஆண்டு தனக்கு சொந்தமான மதுரை வில்லாபுரம் பகுதியில் வீடு ஒன்றும், தென்காசியில் வணிக வளாகம் ஒன்றும் கட்டவுள்ளதாக வில்லாபுரம் பகுதியில் ஹெர்பல் லைப் ஹெல்த்கேர் என்ற நிறுவனம் நடத்திவரும் ராஜேஸ்வரி என்பவரிடம் கூறியுள்ளார்.

இந்நிலையில் ராஜேஸ்வரியின் மூலமாக அறிமுகமான மதுரை ஹாஜிமார் தெரு பகுதியில் வசிக்கும் இர்பான் மற்றும் அவரது மனைவியான ஷமீம் ஆகிய இருவரும் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூவின் ஆதரவாளர் எனவும், அரசு ஒப்பந்ததாரர் எனவும் கூறியுள்ளனர்.

மேலும் தம்பதி இருவரும் தங்களின் மகன் ஆர்க்கிடெக்சர் படித்து முடித்துள்ளதால் அவர் மூலமாக பிரமாண்டமாக வீட்டையும், வணிக வளாகத்தையும் கட்டி தருவதாக ஷேக்கிடம் கூறியுள்ளதாக கூறப்படுகிறது.

இதனை நம்பி ஷேக் முகம்மது தனது வீடு மற்றும் வணிக வளாகம் அமைக்கும் பணிகளை செய்து தருமாறு கூறி பணத்தை வழங்கியதாகவும் கூறப்படுகிறது. இதனையடுத்து பணிகளை தொடங்குவதற்கு முன் தவணை தொகை என கூறி அடுத்தடுத்த பல தவணைகளில் ரூபாய் 75லட்சம் ரூபாய் வரை பணத்தை பெற்றுக்கொண்டு கட்டிட பணிகளை செய்து தரவில்லை எனவும் புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

பணத்தை கேட்டபோது, நிதிநெருக்கடி காரணமாக கட்டிட பணியை தொடங்கவில்லை எனவும், தனக்கு சொந்தமான வீட்டை விற்று பணம் தருவதாகவும் இர்பான் தம்பதியினர் ஷேக்கிடம் கூறியுள்ளனர்.
அதனை அடுத்தும் கடந்த சில தினங்களுக்கு முன்பாக இர்பான் தனது மகளின் திருமணத்திற்காக நகை இல்லாத நிலையில் ஷேக்கிடம் இருந்து 20பவுன் தங்க நகையை பெற்றதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் தன்னிடம் பணம் மற்றும் நகை மோசடியில் ஈடுபட்ட இர்பான் தம்பதியினர் மீது நடவடிக்கை கோரி ஷேக் முகம்மது கடந்த ஜூலை 13ஆம் தேதி மதுரை அண்ணாநகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ஆனால் உரிய நடவடிக்கை எடுக்காத நிலையில் இன்று மதுரை மாவட்ட ஆட்சியர் வாகனம் முன்பாக அமர்ந்தபடி ஷேக் முகம்மது தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதோடு ஆட்சியரிடம் புகார் மனு அளித்தார்.

இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசியபோது, முன்னாள் அமைச்சர் மற்றும் முக்கிய பிரமுகர்களோடு இருப்பது போல புகைப்படங்களை எடுத்துக்கொண்டு அரசு ஒப்பந்ததாரர் என கூறி மோசடியில் ஈடுபட்ட இர்பான் மற்றும் அவரது மனைவி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், பணத்தையும், நகையும் மீட்டு தர வேண்டும் என்றார்.