• Sun. Sep 6th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

ரூபாய் 1 கோடி மதிப்பிலான கடத்தல் தங்கம் பிடிப்பட்டது

ByKalamegam Viswanathan

May 22, 2023

துபாயிலிருந்து மதுரை வந்த விமான பயணியிடமிருந்து 1 கிலோ 565 கிராம் எடையுள்ள ரூபாய் 1 கோடி மதிப்பிலான கடத்தல் தங்கம் பிடிப்பட்டது
மதுரை விமான நிலையத்தில் துபாயிலிருந்து  மதுரை வந்த ஸ்பைஸ் ஜெட் விமானத்தில் தங்கம் கடத்தப்படுவதாக சுங்க இலாகா வான் நுண்ணறிவு பிரிவினருக்கு தகவல் வந்ததுஇதனை தொடர்ந்து நேற்று துபாயிலிருந்து மதுரை விமான நிலையம் வந்த பயணிகளிடம் சுங்க இலக்கா வான் நுண்ணறிவு பிரிவினர் தீவிர சோதனைகளில் ஈடுபட்டனர்.அப்போது கீழக்கரை பகுதியைச் சேர்ந்த நசீம் வீரபாண்டியன் என்ற பயணிடம் சோதனை செய்தபோது அவரது பையில் இருந்து பேஸ்ட் வடிவில் தங்கம் கைப்பற்றப்பட்டது.இந்த தங்கத்தின்  மொத்த எடை 1 கிலோ 565 கிராம் ஆகும் இதன் மதிப்பு 96,18,490 லட்சம் ரூபாய் ஆகும்.  இதனை தொடர்ந்து மத்திய சுங்க இலாகா  வான் நுண்ணறிவு பிரிவினர் கடத்தல் தங்கத்தை பறிமுதல் செய்து  வழக்கு பதிவு செய்து பயணியிடம் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.