• Sat. Jan 17th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

உதகையில் சுற்றுலா பயணிகளுக்கு வழிகாட்ட வழிகாட்டி பதாகை இல்லை

உதகை மஞ்சூர் கைகாட்டி பகுதியில் சுற்றுலா பயணிகளுக்கு வழிகாட்ட ஆள் இல்லை வழிகாட்டி பதாகைகளும் இல்லை.
நீலகிரி மாவட்டம் மஞ்சூர் உதகை குன்னூர் முக்கிய சாலையான கைகாட்டி கீழ் கைகாட்டி பகுதியில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக ஆபத்தான மரம் அகற்றும் பணியில் ஈடுபட்ட ஊழியர்கள் வழிகாட்டி பலகை மீது விழுந்து சேதம் ஏற்பட்டது சேதமடைந்த வழிகாட்டி பலகையினை சாலை ஓரமாக வைத்துச் சென்றனர் பல மாதங்களாக வழிகாட்டி பதாகை இல்லாததால் சுற்றுலா பயணிகளும் வழி தெரியாத வாகன ஓட்டிகளும் வழி மாறிச்செல்லும் நிலை ஏற்பட்டு வருகின்றன தற்போது சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் குன்னூர் உதகை வழியாக மஞ்சூர் அப்பர் பவானி கிண்ணக்கொரை இரியசீகை குந்தா சுற்று வட்டார பகுதியில் உள்ள சுற்றுலா தலங்களை காண ஏராளமான சுற்றுலா பயணிகள்தங்களது நான்கு சக்கர வாகனம் இரு சக்கர வாகனங்களில் அதிகப்படியாக வந்து செல்கின்றனர்.
அவ்வாறு வரும் சுற்றுலா பயணிகள் கீழ் கைகாட்டி பகுதியில் வழிகாட்டி பதாகை இல்லாததால் உதகையிலிருந்து வருபவர்கள் குன்னூர் வழியாக சென்று விடுகின்றனர் குன்னூரில் இருந்து வருபவர்கள் உதகை வழியாக சென்று விடுகின்றனர் மீண்டும் பலரிடம் வழிகளை கேட்டு திரும்பி வரவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு வருகின்றது சுற்றுலா பயணிகளின் வீண் அழைச்சலை கருத்தில் கொண்டு விலாசம் தேடும் வழிகாட்டி பதாகையினை ஒருமுறை விழியை கொண்டு கேட்பாரற்று கிடக்கும் பதாகை இணை நிமிர்த்தி வைத்தால் சுற்றுலா பயணிகளின் வேதனைகள் தீர வழிகாட்டும் தற்போது சாலையோரமாக கிடக்கும் பதாகை மது பிரியர்களின் மறைவிடமாகவும் புகைப்பிடிப்பவர்களின் கூடாரமாகவும் குப்பைகள் கொட்டும் கூடாரமாகவும் மாறி வருகின்றன . பல ஆயிரம் மதிப்புள்ள வழிகாட்டி பதாகை மீண்டும் அதே இடத்தில் பொருத்தி தர வேண்டுமென சமூக ஆர்வலர்களும் அப்பகுதி பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்