• Tue. Dec 16th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

நீலகிரி மாவட்டம் பந்தலூர் தரைப்பாலம் உடைந்ததால் பொதுமக்கள் தவிப்பு

பந்தலூர் அருகே உள்ள கூவமூலா பகுதியில் உள்ள கிராமத்திற்கு செல்லக்கூடிய தரைப்பாலம் மழையால் உடைந்தது இதனால் அப்பகுதி மக்கள் குடியிறுப்பு பகுதிக்கு செல்ல முடியாமல் தவிப்பு…
நீலகிரி மாவட்டம் பந்தலூர் கூடலூர் பகுதிகளில் கடும் வெயில் தாக்கம் அதிகமாக காணப்பட்டது கடந்த இரண்டு வாரமாக மேக மூட்டம் காணப்பட்டது.


இன்னிலையில் நேற்றைய தினம் பந்தலூர் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று இரவு கண மழை பெய்தது. அதில் அய்யன்கொல்லி பகுதில் சாலையின் குறுக்கே மரம் சாய்ந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் கூவமூலா அருகே செட்டிவயல் பகுதியில் சிறுபாலம் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டது. இதனால் உப்பட்டி மற்றும் பந்தலூர் பகுதிகளுக்கு செல்லும் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். விவசாயிகள் விளைபொருட்களை எடுத்து செல்ல முடியாத நிலை ஏற்ப்பட்டுள்ளது. இதே நிலையில் செட்டி வயல் பகுதியில் 180 குடும்பங்கள் இந்ந பாலத்தின் வழியேசெல்ல வேண்டும் இந்த பகுதியில் பாலம் உடைந்ததால் மக்களின் இயல்பு வாழக்கை பாதிக்கப்பட்டது…