• Wed. Dec 17th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

மீனாட்சி திருக்கல்யாணத்தன்று மதுரை சிறுமி சார்வி பிரகதி பாடிய பக்தி பாடல்கள் வீடியோ வைரல்

ByKalamegam Viswanathan

May 3, 2023

மீனாட்சி திருக்கல்யாணத்தன்று அவனியாபுரம் கல்யாண சுந்தரேஸ்வரர் கோவிலில் சிறுமி சார்வி பிரகதி பாடிய பக்தி பாடல்கள் வீடியோ வைரலாக பரவி வருகிறது
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா அவனியாபுரம் பாலம் மீனாம்பிகை கல்யாண சுந்தரேஸ்வரர் திருக்கோயில் உள்ளது பாண்டிய மன்னர் காலத்தில் கட்டப்பட்ட இந்த கோவிலில் ஒவ்வொரு வருடமும் சித்திரை திருவிழா என்று 10 நாள் திருவிழா நடைபெறும்.

தினமும் பாலமீனாம்பிகை – கல்யாணசுந்தரேஸ்வரர் சித்திரை திருவிழாவை முன்னிட்டு வீதி குளம் வருவர். கடந்த 30ம் தேதிபட்டாபிஷேகம் |ஒரு 1ம் தேதி திக்ஜெயம் இரண்டாம் தேதி திருக்கல்யாணம் மாலை பூப்பல்லாக்கு என சிறப்பாக நடைபெற்றது.நிலையில் திருக்கல்யாணத்தன்றுபெருங்குடியைச் சேர்ந்த கணேசன் அருணா தம்பதியினரின் மகள் சார்வி பிரகதி (வயது 5)
தனது மழலை மாற குரலில் சின்னஞ்சிறு பெண் போலே சிட்டாடை உடை உடுத்தி, கலைவாணி நின்கருணை பேரழகே எனும் பக்தி பாடல்களை பாடி பரவசப்படுத்திய காணொளி தற்போது வீடியோ வைரலாக பரவி வருகிறது.