• Wed. Dec 17th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

இளம்பெண்ணை ஏமாற்றி பணத்தை அபேஸ் செய்த வாலிபர்..!

Byவிஷா

Apr 28, 2023

கோயமுத்தூரில் ஏடிஎம்மில் பணம் எடுப்பது போல் நடித்து இளம்பெண்ணை ஏமாற்றிய வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ராஜ நாயக்கர் தோட்டத்தில் நாகராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விஜயலட்சுமி (வயது 30) என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் விஜயலட்சுமி பணம் எடுப்பதற்காக அப்பகுதியில் இருக்கும் இரண்டு ஏடிஎம் மையத்திற்கு சென்றுள்ளார். ஆனால் விஜயலட்சுமியால் பணத்தை எடுக்க இயலவில்லை.
இதனால் அங்கு நின்று கொண்டிருந்த ஒரு வாலிபரிடம் விஜயலட்சுமி பணம் எடுத்து தருமாறு உதவி கேட்டுள்ளார். அந்த வாலிபர் உதவி செய்வது போல நடித்து விஜயலட்சுமியின் ஏ.டி.எம் கார்டு மற்றும் ரகசிய நம்பரை பயன்படுத்தி 40 ஆயிரம் ரூபாய் பணத்தை எடுத்துக் கொண்டு அங்கிருந்து தப்பி சென்றார். இதுகுறித்து விஜயலட்சுமி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் பணத்தை அபேஸ் செய்த வாலிபரை தீவிரமாக தேடி வருகின்றனர்.