• Tue. Dec 2nd, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

மதுரை மாநகராட்சி பகுதிகளில் வளர்ச்சித் திட்டப் பணிகள் -மேயர் ஆய்வு

ByKalamegam Viswanathan

Apr 26, 2023

மதுரை மாநகராட்சி மண்டலம் 4க்கு உட்பட்ட பகுதிகளில், மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து, மேயர் இந்திராணி பொன்வசந்த் , மாநகராட்சி ஆணையாளர் சிம்ரன்ஜீத் சிங் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.
மதுரை மாநகராட்சி மண்டலம் 4 வார்டு எண்.41 டீச்சர்ஸ் காலனி பகுதியில் பாதாள சாக்கடையில் ஏற்பட்டுள்ள அடைப்புகள் சரிசெய்யும் பணிகள், பாபுநகர் பகுதியில் செல்லும் வாய்க்காலை தூர்வாரி தூய்மை செய்வது குறித்தும். ஐராவதநல்லூர் பகுதியில் உள்ள குடிநீர் மேல்நிலைத் தொட்டி மராமத்து பணிகள், ஐராவதநல்லூர் எம்.ஜி.ஆர்.நகர் பகுதியில் உள்ள மாநகராட்சி கழிப்பறைகளை மராமத்து பணிகள் மேற்கொள்ளுதல், அனுப்பானடி மாநகராட்சி உயர்நிலைப்பள்ளியில் புதிதாக கட்டப்பட்டு வரும் வகுப்பறை கட்டிட பணிகளையும் , மேயர் ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து ,அவ்வளாகம் அருகே அமைந்துள்ள ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி மையத்தில் ஆய்வு மேற்கொண்டார். மேலும், அனுப்பானடி நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் பொதுமக்களுக்கு அளிக்கப்படும் சேவைகள் மற்றும் அடிப்படை வசதிகள் குறித்தும், மேயர் , ஆய்வு மேற்கொண்டு நடைபெற்று வரும் வளர்ச்சிப்பணிகள் மற்றும் அடிப்படை வசதி பணிகளை விரைந்து மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அலுவலருக்கு உத்தரவிட்டார். இந்த ஆய்வின்போது, நகரப்பொறியாளர் அரசு, மண்டலத் தலைவர் முகேஷ்சர்மா, உதவி ஆணையாளர் திருமலை நகர்நல அலுவலர் மரு.வினோத்குமார், மக்கள் தொடர்பு அலுவலர் மகேஸ்வரன், மாமன்ற உறுப்பினர்கள் செந்தாமரைகண்ணன்,காளிதாஸ், பிரேமா, உதவி செயற்பொறியாளர்கள் மயிலேறிநாதன், சுப்பிரமணியன், சுகாதார அலுவலர் கோபால், மாநகராட்சி அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.