• Fri. Jan 23rd, 2026
WhatsAppImage2026-01-22at2244171
previous arrow
next arrow
Read Now

வயல் ஆட்டு கிடையில் 60 ஆட்டு குட்டிகள் தீயில் கருகி சாவு

குமரி மாவட்டத்தில் அறுவடை முடிந்த வயல்களில் ஆட்டு கிடைகள் பரவலாக மாவட்டம் முழுவதும் போடப்பட்டுள்ளது.
சுசீந்திரம் அருகே உள்ள குறண்டி பகுதியில் உள்ள ஒரு வயலில்,நெல்லை மாவட்டம் ராதாபுரம் தாலுகா இருக்கன் துறை கிராமம் சங்கநேரியை சேர்ந்த சுடலையாண்டி(36) 500 ஆடுகள் அடங்கிய மந்தையை போட்டுள்ளார்.காலை மந்தையில் உள்ள செம்மறி ஆடுகளை மேய்ச்சலுக்கு கொண்டு செல்லும்போது.சிறிய செம்மறி ஆட்டு குட்டி கள் 60_யை(1 முதல் 30 நாட்கள் வயதுடைய) வயலில் ஒரு பகுதியில் உள்ள இரும்பு கூண்டுக்கு உள் அடைத்து செல்வது வழக்கம்
சுடலையாண்டி. வழக்கம் போல் நேற்றும் (ஏப்ரல் 23)ம் தேதி 500_செம்மறி ஆடுகளையும் மேய்ச்சலுக்கு கொண்டு சென்றார்.மதியம் 1-மணி போல் செம்மறி ஆட்டு குட்டி களுக்கு உணவு கொடுப்பதற்கு செல்லும் வழியிலே ஆடுகள் கிடைப்போட்ட வயல் தீ பற்றி எரிவதை கண்டு பதட்டத்துடன்.வயலின் சிரிய வரப்புகளில் வேகமாக ஓடி கிடை போடப்பட்ட வயலில் கூண்டுக்குள் அடைக்கப்பட்டிருந்த ஆட்டுக்குட்டிகளை பார்க்க ஓடி சென்று பார்த்தபோது கூண்டில் பாதுகாப்பிற்கு அடைக்கப்பட்டிருந்த 60_ஆடுகளும் தீயில் கருகிய நிலையில் செத்துக் கிடந்ததை பார்த்து சுடலையாண்டி வாய் விட்டு கதறி அழுத ஓசையை அக்கம் பக்கத்தினர் கேட்டு.தீ பற்றி எறிந்த வயல் பகுதிக்கு தீ பற்றிய தகவல் கேட்டு அக்கம் பக்கத்து வயல் சொந்த காரணங்களும் சம்பவம் இடத்திற்கு வந்ததுடன்.ஆட்டுமந்தையின் சொந்த காரர் சுடலையாண்டியை சமாதானம் படுத்தியதுடன்.வயலில் தீ பற்றியதையும் அதில் இரும்பு கூட்டில் பாதுகாப்பு கருதி அடைக்கப்பட்டிருந்த 60_செம்மறி குட்டிகள் மாண்டு போனது குறித்து சுசீந்திரம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.
சம்பவம் இடத்திற்கு வந்த சுசீந்திரம் காவல் நிலைய துணை ஆய்வாளர் முத்துசாமி மற்றும் காவல்துறையினர் அக்கம் பக்கத்தில் வயலில் தீ பற்ற என்ன காரணம் என்ற விசாரணையில் முதல் கட்டமாக கிடைத்த தகவல். தீ பற்றியுள்ள வயல் வரப்பு வழியாக சென்ற நபர் குடித்துக் கொண்டு சென்ற பீடியை அணைக்காமல் வயல் வெளியில் வீசி சென்றதில் தீ பற்றியிருக்கலாம் என தெரிந்த நிலையில் மேற்கொண்டும் வயலில் பற்றிய தீ. தீயின் காரணமாக இறந்த 60ஆட்டு குட்டிகள் பின்னணியில் எதேனும் மர்ம மனிதர்கள் உள்ளனவா என மேலும் விசாரணையை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.
ஆட்டு குட்டிகள் இறந்ததற்கு பாதிக்கப்பட்ட நபர் சுடலையாண்டிக்கு அரசின் மூலம் நிவாரணம் கிடைக்கும் வகையில் காவல்துறை முயற்சி மேற்கொண்டுள்ளனர்