• Mon. Jul 13th, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

அலங்காநல்லூரில் பாமக சார்பில் மாவட்ட நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம்

ByKalamegam Viswanathan

Apr 25, 2023

அலங்காநல்லூரில் பாமக சார்பில் மதுரை தெற்கு மாவட்ட நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம் மற்றும் அறிமுக கூட்டம் நடைபெற்றது
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் கேட்டுக்கடையில் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் மருத்துவர் ராமதாஸ், ஆணைக்கிணங்க இளைஞர்களின் தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ், அவர்களின் ஆலோசனையின் பேரில் மதுரை தெற்கு மாவட்ட கலந்தாய்வு கூட்டம் மற்றும் அறிமுக கூட்டம் நடைபெற்றது இந்தக் கூட்டத்திற்கு தெற்கு மாவட்ட கழக செயலாளர் கே.பி.ராஜா, தலைமை தாங்கினார் மாவட்டத் தலைவர் முருகன், மாவட்ட துணை தலைவர் முடுவார்பட்டிபிரபு, ஒன்றிய செயலாளர் செந்தில்குமார், ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்தக் கூட்டத்தில் பல்வேறு ஆலோசனைகள் நிர்வாகிகளுக்கு வழங்கப்பட்டது. கட்சியை வலு சேர்க்கும் விதமாக வரும் காலங்களில் அதிக உறுப்பினர் சேர்க்கை அனைத்து கிராமங்கள் மற்றும் பேரூராட்சி வார்டு பகுதிகளிலும் கட்சி கொடியேற்றுவது மருத்துவர் அன்புமணி ராமதாஸ் அவர்களை அழைத்து வந்து அவரது தலைமையில் மாபெரும் கூட்டம் நடத்துவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இந்த கூட்டத்தில் மாவட்ட ஒன்றிய கிளை கழக நிர்வாகிகள் மற்றும் மகளிர் அணி நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.. முன்னதாக புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட தெற்கு மாவட்ட செயலாளர் கே.பி.ராஜா அவர்களுக்கு மாவட்ட துணைத் தலைவர் முடுவார்பட்டிபிரபு, ஆளுயர மாலை அணிவித்து வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டார். தொடர்ந்து மாவட்ட ஒன்றிய நகர கிளைக் கழக நிர்வாகிகள் பொன்னாடை அணிவித்து வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்..