• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

மருத்துவர் விஜயபாஸ்கர் மீது நடவடிக்கை எடுக்க கோரி புகார்

கனிம வள கொள்ளையில் ஈடுபட்ட மருத்துவர் விஜயபாஸ்கர் மீது நடவடிக்கை எடுக்க கோரி ஆட்சியர் அலுவலகத்தில் புகார்
சேலம் அருகே அரசு ஆரம்ப சுகாதார நிலைய விரிவாக்கத்திற்காக வெட்டி எடுக்கப்பட்ட பாறை கனிமங்களை தனியார் கல் குவாரிகளுக்கு விற்பனை செய்து பல லட்சம் ரூபாய் முறைகேட்டில் ஈடுபட்ட மருத்துவர் விஜயபாஸ்கர் என்பவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள மல்லிய கரை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் வட்டார மருத்துவ அலுவலராக பணிபுரிபவர் மருத்துவர் விஜயபாஸ்கர். இவர் ஆரம்ப சுகாதார மருத்துவமனை வளாகத்தை விரிவாக்கம் செய்கிறேன் சுத்தப்படுத்துகிறேன் என்று கூறி மருத்துவமனை வளாகத்தை ஒட்டி உள்ள மலையில் இருக்கும் பெரிய அளவிலான பாறைகளை உடைத்து தனியாருக்கும் கல் குவாரிகளுக்கும் விற்று பல லட்சம் ரூபாய் பண முறைகேட்டில் ஈடுபட்டு வருவதாகவும் , மேலும் அரசு மருத்துவமனையில் நல்ல நிலையில் உள்ள கட்டடங்களையும், ஒரு வருடத்திற்கு முன்பு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சரால் திறந்து வைக்கப்பட்ட புதிய மருத்துவமனை கட்டடங்களையும் இடித்து தரைமட்டமாக்கி உள்ளதாகவும் கூறப்படுகிறது .எனவே இவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மனு அளிக்கப்பட்டுள்ளது.


இந்த மனு குறித்து பேட்டியளித்த அதே பகுதியைச் சேர்ந்த தங்க வளவன் என்பவர் கூறுகையில்,’ மருத்துவர் விஜயபாஸ்கர் மல்லியகரை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் வட்டார மருத்துவ அலுவலராக பணிபுரிந்து வருகிறார் .
இவர் சில ஆண்டுகளுக்கு முன்பு இதே மருத்துவமனையில் பணிபுரிந்து பணியிட மாறுதல் பெற்று வெளியூருக்கு சென்ற இந்த நிலையில், அண்மையில் மீண்டும் மல்லியகரை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு இடமாற்றம் பெற்றுக்கொண்டு வந்து, இங்கேயே பணிபுரிந்து வருகிறார் .
நல்ல நிலையில் உள்ள மருத்துவமனை கட்டடங்களை இடித்து தரைமட்டமாக்கி உள்ளார் .அதேபோல மருத்துவமனை வளாகத்தை விரிவாக்கம் செய்கிறேன் சுத்தப்படுத்துகிறேன் என்று கூறிவிட்டு மருத்துவமனை வளாகத்தை ஒட்டி உள்ள மலையில் இருக்கும் பெரிய அளவிலான பாறைகளை உடைத்து தனியாருக்கும் கல்குவாரிகளுக்கும் விற்று வருகிறார். இதில் பல லட்சம் ரூபாய் அவர் பணம் சம்பாதித்து இருக்கிறார். இதே போல கர்ப்பிணி பெண்கள் மருத்துவமனைக்கு உடல் பரிசோதனைக்கு வருகையில் அவர்களுக்கு சத்தான மதிய உணவு வழங்க வேண்டும் .ஆனால் இவர் பதவியேற்ற நாள் முதல் எந்த உணவும் கர்ப்பிணிகளுக்கு வழங்கப்பட்டது இல்லை .மேலும் பிரசவித்த தாய்மார்களுக்கு மூன்று வேளையும் சாப்பாடு வழங்க வேண்டும். ஆனால் இவர் வழங்கவில்லை. குடும்ப கட்டுப்பாடு செய்யும் பெண்களுக்கு மூன்று வேளையும் சாப்பாடு வழங்க வேண்டும். ஆனால் இதுவரை மருத்துவர் விஜயபாஸ்கர் வழங்கவில்லை. அதே நேரத்தில் தாய்மார்களுக்கு சத்தான உணவு வழங்கியதாக போலி ரசீது தயார் செய்து அரசு ஒதுக்கிய நிதியை கொள்ளையடித்து வருகிறார். எனவே இவர் மீது உரிய நடவடிக்கை எடுத்து மருத்துவ அலுவலர் பொறுப்பில் இருந்து நீக்க வேண்டும்’ என்று தெரிவித்தார்.