• Wed. Mar 11th, 2026
WhatsAppImage2026-03-05at0942011
previous arrow
next arrow
Read Now

கள்ளத்தொடர்பு விவகாரம் – தம்பியை அரிவாளால் வெட்டிய அண்ணன் கைது

ByKalamegam Viswanathan

Apr 24, 2023

கள்ளத்தொடர்பில் இருந்த தம்பியை தட்டி கேட்ட அண்ணன் இறுதியில் கொலை முயற்சியில் முடிந்த தகராறு
. மதுரை விளாங்குடி பேங்க் காலனியை சேர்ந்த வெங்கடேஷ் என்பவர் மனைவிக்கு தெரியாமல் வேறொரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பில் இருப்பதாக குடும்பத்தாருக்கு தகவல் தெரிய வந்ததையடுத்து உடன்பிறந்த அண்ணன் வினோத்குமார் என்பவர் தம்பி வெங்கடேஷிடம் இது சம்பந்தமாக கேட்டபோது இருவருக்கும் வாய் தகராறு ஏற்பட்டது இதனையடுத்து அண்ணன் வினோத்குமாரை தம்பி வெங்கடேஷ் அசிங்கமாக திட்டியுள்ளார் இதனையடுத்து ஆத்திரமடைந்த அண்ணன் வினோத்குமார் வீட்டிலிருந்து அரிவாளை எடுத்து வந்து தம்பி வெங்கடேஷை இடது தலையில் வெட்டியுள்ளார் இதனால் தலையில் பலத்த வெட்டுக்காயம் ஏற்பட்டு அருகில் உள்ள லட்சுமி மருத்துவமனையில் முதல் உதவி சிகிச்சை பெற்று பின்பு அங்கிருந்து அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார் .

தற்போது நலமுடன் இருப்பதாக தெரிவித்தனர் மேலும் அரிவாளால் வெட்டிய அண்ணன் வினோத்குமாரை கரிமேடு காவல்துறையினர் கைது செய்து சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் மேலும்
அந்த பகுதியில் சம்பவம் நிகழ்ந்த நேரத்தில் போக்குவரத்து பணியில் இருந்த போக்குவரத்து காவலர் முன்பே நடந்த கொலை முயற்சி சம்பவம் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது..