மதுரையில் நேற்று பெய்த கன மழையில் பல ஆண்டுகளாக நிழல் தந்த மரம் கீழே விழுந்ததால் கண்ணீர் விட்டு அழுத மூதாட்டி
மதுரை மாநகர் மற்றும் புறநகர் முழுவதும் திடிரென இரவு 7 மணி முதல் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக பலத்த காற்றுடன் கூடிய கன மழை பெய்தது.இதில் மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகேயுள்ள மேலவாசல் பகுதியில் உள்ள அம்மா உணவக வாசலில் இருந்த பழமையான வேப்பமரம் ஒன்று திடிரென பலத்த காற்றின் காரணமாக முறிந்துவிழுந்தது .
இதனை பார்த்த அந்த பகுதியைச் சேர்ந்த வயதான மூதாட்டி ஒருவர் தான் அவ்வப்போது தங்கும் மற்றும் கோவில் அமைந்துள்ள நிழல்தரும் வேப்பமரம் உடைந்து விழுந்ததை எண்ணி சிறு குழந்தை போல கண்ணீர்விட்டு அழத் தொடங்கினார்.மதுரை மக்கள் மக்களோடு மட்டுமன்றி மரத்தோடும் பாசமாக இருப்பவர்கள் என்பதை பாட்டியின் கண்ணீர் நிரூபித்தது.