• Thu. Mar 19th, 2026
WhatsAppImage2026-03-12at2345221
previous arrow
next arrow
Read Now

சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவில் சித்திரை தெப்பத் திருவிழா கொடியேற்றம்

குமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற திருக்கோவில்களில் ஒன்று. சுசீந்திரம் தாணுமாலைய சுவாமி திருக்கோயில் இந்த கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா 10 நாட்கள் மிக சிறப்பாக நடைபெறும். இவ்வாண்டு திருவிழாவின் முதல் நிகழ்ச்சியாக காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது..

கொடியேற்றம் நிகழ்வில் உள்ளூர் மக்கள் பெரும் கூட்டமாக பங்கேற்ற நிகழ்வில், சுற்றுலா பயணிகளும் அதிக எண்ணிக்கையில் பங்கேற்று கொடியேற்றம் நிகழ்ச்சியை கண்டு வணங்கினர். கொடியேற்றம் நிகழ்வில்.குமரி கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ், சுசீந்திரம் பேரூராட்சி தலைவர் அனுசியா மற்றும் துணை தலைவர்,கவுன்சிலர்கள்,பக்த சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர்.எதிர் வரும் 29_ம்தேதி காலை 7.30_மணிக்கு தேரோட்டமும்,30_ம் தேதி இரவு 8_மணிக்கு தெப்பத்திருவிழா நடக்கவுள்ளது.திருவிழா நாட்களில் தினமும் மாலை ஆன்மீக சொற்பொழிவுகள் மற்றும் கலை நிகழ்ச்சிகளும் நடைபெறுகின்றன.