• Thu. Nov 27th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

வழக்கு தொடர்ந்த ஐஸ்வர்யா ராயின் மகள்…!

ByA.Tamilselvan

Apr 20, 2023

தன்னை பற்றி தவறான தகவல்களையும் ,வதந்தி பரப்பியயூடியூப் சேனல்கள் மீது ஐஸ்வர்யா ராயின் மகள் வழக்கு தொடர்ந்துள்ளார்.
ஐஸ்வர்யா ராயின் மகள் ஆராத்யாவின் உடல்நலம் சரியில்லை என்றும் அவருக்கு அரிய வகை நோய் உள்ளதாகவும் யூடியூப் சேனல்கள் சமீபத்தில் வதந்தி ஒன்றை பரப்பின. இந்நிலையில், தவறான உள்நோக்கத்துடன் இப்படியொரு வதந்தியை பரப்பிய சுமார் 10 யூடியூப் சேனல்கள் மீது வழக்கு தொடர்ந்திருக்கிறார். அந்த வீடியோவை டெலிட் செய்ய வேண்டும் என்றும் மேலும், அவர்கள் செய்த தவறுக்கு உரிய தண்டனையை வழங்க வேண்டும் என ஆராத்யா பச்சன் வழக்கறிஞர்களான ஆனந்த் மற்றும் நாயக் டெல்லி ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
வழக்கை இன்று விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம், ஒரு குழந்தை குறித்த தவறான தகவல்களை பரப்புவதை முற்றிலும் ஏற்றுக் கொள்ள முடியாது. சட்டம் ஒருபோதும் அதனை அனுமதிக்காது. சாமானியரின் குழந்தையாக இருந்தாலும், பிரபலங்களின் குழந்தையாக இருந்தாலும் ஒரே போல் மரியாதையுடனும், கண்ணியத்துடனும் நடத்தப்பட வேண்டும்.அதனை உறுதிசெய்ய வேண்டும் என்று தெரிவித்த நீதிமன்றம் ஆரத்யா தொடர்பான தகவல்களை வெளியிட தடைவிதித்துள்ளது. மேலும் இந்த விவகாரத்தில், சம்மந்தப்பட்ட வீடியோக்களை முடக்க மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்துக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.மேலும், தவறான தகவல்களை பரப்பியது குறித்து பதிலளிக்க ஒன்பது யூடியூப் சேனல்களுக்கும், கூகுள் நிறுவனத்துக்கும் சம்மன் அனுப்பியும் டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.