• Mon. Jul 13th, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

மெரினாவில் சசிகலா ஆதரவாளர்கள் 20 பேரிடம் பிக்பாக்கெட் திருடர்கள் கைவரிசை…

Byமதி

Oct 17, 2021

அதிமுகவின் 50-வது ஆண்டு தொடக்க விழா நாளை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி இன்றைய தினம் அதிமுக கொடி பொருத்திய காரில், ஜெயலலிதா நினைவிடத்திற்கு சென்று கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தியுள்ளார் சசிகலா.

சசிகலா சிறையிலிருந்து வெளியே வந்த பின் ஜெயலலிதா நினைவிடத்திற்கு செல்வது இதுவே முதல்முறையாகும். எனவே, பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள் திரண்டு சசிகலாவிற்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். அதிமுக பொதுச்செயலாளர் சின்னம்மா என்று உணர்ச்சி பொங்க முழக்கமிட்டனர்.

இந்த கூட்ட நெரிசலை பயன்படுத்தி சசிகலா ஆதரவாளர்கள் 20 பேரிடம் பிக்பாக்கெட் திருடர்கள் கைவரிசை காட்டியுள்ளனர். 20 பேரிடம் இருந்து ரூ.93,000 மற்றும் 5 செல்போன்கள் திருட்டி உள்ளனர்.

பணம், செல்போனை பறிகொடுத்த 20 பேர் அளித்த புகாரின் பேரில் அண்ணா சதுக்கம் போலீசார் திருடர்களை தேடி வருகின்றனர்.