• Fri. Sep 12th, 2025
WhatsAppImage2025-09-12at0142046
WhatsAppImage2025-09-12at0142042
WhatsAppImage2025-09-12at014204
WhatsAppImage2025-09-12at0142041
WhatsAppImage2025-09-12at0142045
WhatsAppImage2025-09-12at0142047
WhatsAppImage2025-09-12at0142048
WhatsAppImage2025-09-12at0142044
WhatsAppImage2025-09-12at0142043
previous arrow
next arrow
Read Now

அண்ணாமலை கர்நாடகா பாஜக ஊழல் பட்டியலையும் வெளியிட வேண்டும்-மதுரையில் சீமான் பேட்டி..

ByKalamegam Viswanathan

Apr 17, 2023

கர்நாடகா பாஜக ஊழல் பட்டியலையும் வெளியிட வேண்டும். தம்பி ஒவ்வொன்றாக செய்வார் என்று நினைக்கிறேன். மதுரை விமான நிலையத்தில் சீமான் பேட்டி..
இந்தியர்கள் இந்தி பேசுபவர்கள் மட்டும்தான்; வட இந்திய தொழிலாளர்கள் தமிழகம் வருவது வயிற்றுப் பசிக்காக வருகிறார்களாம் -நாங்கள் மீன் பிடிப்பது வசதி வாய்ப்புக்காக போகிறோமா.? -சீமான் கேள்வி.
சென்னை செல்வதற்காக மதுரை விமான நிலையம் வந்த நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் செய்தியாளர்கள் ஆர் எஸ் எஸ் பேரணி நடைபெற்று வருகிறது இது குறித்த கேட்டதற்கு. அவர்கள் நீதிமன்றத்தில் அனுமதி பெற்று நடக்கிறது.பேரணி என்றால் அதில் ஒரு நோக்கம் இருக்க வேண்டும் அவர்கள் வலுக்கட்டாயமாக நடத்த வேண்டும் என்பதற்காக நடத்துகின்றனர். அதில் ஒன்றும் பெரிய செய்தி இல்லை..தொடர்ந்து பரந்தூர் விமான நிலையம் தொடர்பாக போராட்டம் நடைபெற்று வருகிறது. இது குறித்த கேள்விக்கு. அவளுடன் தொடர்ந்து ஆதரவாக நாங்க இருக்கிறோம் இருக்கிற வானூர்தி நிலையங்களிலே, பறப்பதற்கு வானூர்தி இல்லாத நிலையில் புதிதாக விமான நிலையம் எதற்கு.சொந்தமாக வானூர்தி இல்லாத நாட்டிற்கு எதற்கு வானூர்தி நிலையம் நகைச்சுவையாக இல்லையா இது முன்னோர்கள் விலை நிலங்களாக மாற்றுவதற்கு அதிக விலை கொடுத்து இருக்கின்றனர். முதலில் வானூர்தியை கொண்டு வாருங்கள் பிறகு பேசுவோம்.
சென்னை மீனம்பாக்கத்தில் உள்ள வானூர்தி நிலையம் பத்தவில்லை என போராடினார்களா.? வசதி குறைவாய் இருக்கிறது என்று சொன்னார்களா.?மக்களின் போராட்ட உணர்வை புரிந்து கொண்டு அரசு இந்த செயலை கைவிட வேண்டும்மீனவர்கள் மின்தடை காலத்தில் வழங்கப்படும் உதவித்தொகை அதிகரிக்க வேண்டும் என கோரிக்கை குறித்த கேள்விக்கு.
நாங்கள் கேட்காததை கொடுக்கிறார்கள் கேட்பதை கொடுப்பதில்லை.. எங்கள் பெண்கள் எல்லாம் வீதியில் வந்து இலவச பஸ் பாஸ் கேட்டார்களா.? குடும்ப அட்டைக்கு ஆயிரம் ரூபாய் வேண்டும் என கேட்டார்களா.? கேட்காதது எல்லாம் கொடுக்கிறார்கள் ஆனால் மீன் பிடி தடை காலத்தில் மீனவர்களுக்கு கொடுக்கும் உதவி தொகை போதவில்லை என கேட்கிறார்கள் அதை கொடுக்க வேண்டும் என்றார்.
அண்ணாமலை அனைத்து கட்சி ஊழல் பட்டியலும் வெளியிடுவேன் என கூறியது குறித்து கேள்விக்கு.
அதைப்போல் அவர்கள் கட்சியின் ஊழல் பட்டியலும் கூட்டணி கட்சியின் ஊழல் பட்டியலும் வெளியிட வேண்டும் கர்நாடகா பாரதிய ஜனதா கட்சி ஊழல் பட்டியலையும் வெளியிட வேண்டும். தம்பி ஒவ்வொன்றாக செய்வார் என்று நினைக்கிறேன்.
ஊழல் பட்டியலை வெளியிடுவதில் பயனில்லை நடவடிக்கை எடுக்கணும் வருமானவரித்துறை, அமலாக்க துறையும் உங்களிடம் தான் இருக்கிறது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை அதனால் இந்த செய்தி எனக்கு வேடிக்கையாக இருக்கிறது.
லண்டனில் வைக்கப்பட்டுள்ள பென்னிகுக் சிலைக்கு முழுமையாக பணம் செலுத்தாததால் கருப்புத் துணியால் மூடப்பட்டுள்ளது குறித்த கேள்விக்கு.
பென்னிகுக் மீது மிகுந்த மரியாதை வைத்துள்ளோம், போற்றத்துக்குரிய பெருந்தகை அவருக்கு அரசு உரிய தொகையை செலுத்தி கருப்பு துணியை அகற்ற செய்வதுதான் அதற்குரிய பெருமையாக இருக்கும் அது அரசு செய்ய வேண்டும்.
தமிழக மீனவர் பிரச்சினை குறித்த கேள்விக்கு.
அவர்களுக்கு இந்தியர்கள் இந்தி பேசுபவர்கள் மட்டும்தான் அவர்களுக்கு எங்களுடைய நிலம், வளம், எல்லாம் தேவைப்படுகிறது. வருமனம் தேவைப்படுகிறது. ஆனால் எங்களுடைய உணர்வு, உயிர் உரிமையை எல்லாம் இந்த ஆட்சியாளர்களுக்கு பொருட்டே கிடையாது அதான் பிரச்சனை.
வட இந்திய தொழிலாளர்கள் தமிழகம் வருவது வயிற்றுப் பசிக்காக வருகிறார்கள் பாவம் என கூறுகின்றனர். நாங்கள் மீன் பிடிப்பது வசதி வாய்ப்புக்காக போகிறோமா.?
சாவது தமிழனாக இருந்தால் சகித்துக் கொள்ளலாம், லட்சக்கணக்கானோர் கடலுக்குள் செத்தாலும், ஆந்திரா காட்டுக்குள் செம்மரக்காட்டுக்குள் செத்தாலும், சகித்துக் கொள்ளலாம் இப்படி தான் நிலைமை இருக்கிறது. என கூறினார்.