• Fri. Dec 19th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

குமரியின் வசந்தம் தமிழகத்தின் வாசம்…வசந்தகுமார்

இளமையின் கனவுகளை நிஜமாக்கி.தமிழகத்தில் அவரது “வசந்த் அன்கோ”மிகப்பெரிய வர்த்தக சாம்ராஜியமாக உருவாக்கி பல நூறு பேர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கிய.ஒரு தனி மனிதன் சிந்தனை, செயல்பாடு,சாதித்து காட்டுவதில் தளர்வே இல்லாத இடை விடதா முயற்சி அதன் அடையாளம் தான் வசந்த குமார்.
வீட்டு உபயோக பொருட்கள் தவணை முறை திட்டத்தில் பொருளை சொந்தமாக்குவது.விஜிபி நிறுவனத்தில் பணியும்,பணிக்காலத்திலே கற்றபாடம் வசந்த குமாரை வெற்றி ராஜபாட்டையில் நடை போட வைத்தது.எந்த நிலையிலும் தன் நிலை மாறதவர்,மறக்காதவர் என்பதின் அடையாளம்.


வசந்த குமார் தனியாக வியாபாரம் தொடங்கிய அந்த நாள் தொட்டு,அவரது இறுதி மூச்சு நிற்கும் வரை.அவரது ஒவ்வொரு பிறந்த நாளின் போதும்.விஜிபி நிறுவனத்தின் இன்றைய தலைவர் .விஜிபி சந்தோஷத்தின் காலை தொட்டு வணங்கி ஒவ்வொரு பிறந்த நாள் போதும் கடமையாக பின் பற்றி வந்தார். மறைந்த வசந்த குமாரின் நினைவை போற்றும் நாள்.அகஸ்தீஸ்வரத்தில் உள்ள அவரது நினைவிடத்தில் நடை பெற்றது.
மறைந்த பாராளுமன்ற உறுப்பினர் வசந்தகுமார் 73 வது பிறந்தநாள் தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டது இதை ஒட்டி கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அடுத்த அவரது சொந்த ஊரான அகஸ்தீஸ்வரத்தில் அமைக்கபட்டுள்ள புதிய மணிமண்டபம் திறப்பு விழா நடைபெற்றது இதையொட்டி அவரது சமாதியில் குடும்பத்தினர் சிறப்பு வழிபாடு செய்து அஞ்சலி செலுத்தினர். பின்னர் சமபந்தி விருந்தை அவரது துணைவியார் தமிழ்செல்வி மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் விஜய்வசந்த் ஆகியோர் தொடங்கிவைத்தனர் இதில் அவரது புதல்வன் வினோத்குமார், புதல்வி தங்கமலர் ஜெகன்நாத், எம் எஸ். காமராஜ், எம். எஸ். சண்முகம், காங்கிரஸ் கட்சி மாநகர மாவட்ட தலைவர் நவீன்குமார், மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் பினுலால் சிங், மற்றும் குமரி, நெல்லை, ஆலங்குளம், தென்காசி, மதுரை, திருச்சி உள்பட ஏனைய மாவட்டங்களில் இருந்து வந்திருந்த காங்கிரஸ் நிர்வாகிகள் வசந்தகுமார் திருஉருவசிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இருந்து காங்கிரஸ் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் ஏராளமனோர் கலந்துகொண்டனர்