• Sat. Jan 17th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

மதுரையில் மோட்டார் சைக்கிளில் சாகசம் – 9 பேர் கைது

ByKalamegam Viswanathan

Apr 10, 2023

மோட்டார் சைக்கிளில் சாகசத்தில் ஈடுபட்ட வாலிபர்களை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தல்லாகுளம் போலீசார் சொக்கிகுளம் வல்லபாய் மெயின்ரோடு பகுதியில் ரோந்து சென்றனர்.அங்கு 10-க்கும் மேற்பட்ட வாலிபர்கள் மோட்டார் சைக்கிளில் வீலிங் செய்து கொண்டிருந்தனர்.

இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போலீசார் 9 பேரையும் காவல் நிலையத்திற்கு அழைத்துச்சென்று விசாரித்தனர்.

அவர்கள் பரசுராம்பட்டி சிலோன் காலனி கனக சுந்தரம் மகன் ஜீவரஞ்சன் (வயது21), புதூர் வீரகாளி கோவில்தெரு சுரேஷ் மகன் வினோத் கமார்(20), செல்லூர் எலி அய்யனார் கோவில் தெருவை சேர்ந்த 17 வயது சிறுவன், மாட்டுத்தாவணி கருப்பையா மகன் விஜயசாரதி (21), நரிமேடு ஜீவா குறுக்குத்தெரு முத்துப்பாண்டி மகன் வினோத் (18), செல்லூர் 50 அடி ரோடு சரவணன் மகன் பிரதீப் (21), நரிமேடு,
ஜீவா தெரு, செந்தில் குமார் மகன் மனோஜ் (19), அவரது சகோதரர் வேல் பிரபாகரன் (22), சுயராஜ்யபுரம் ராஜா மகன் நிரஞ்சன் (19) என்பது தெரியவந்தது. 9 பேரையும் போலீசார் கைது செய்தனர்.