• Fri. May 3rd, 2024

குமரியில் நாளை 114 மையங்களில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு தொடக்கம்..!

Byவிஷா

Apr 5, 2023

தமிழகத்தில் நாளை பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்க இருக்கும் நிலையில், குமரியில் 114 மையங்களில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கப்பட உள்ளது.
முன்னதாக மாணவர்களுக்கான ஹால்டிக்கெட் ஆன்லைன் மூலமாக வழங்கப்பட்டுள்ளது. நாளை 6-ந்தேதி தொடங்கும் பொது தேர்வு வருகிற 20-ந்தேதி வரை நடைபெறுகிறது. மார்த்தாண்டம் கல்வி மாவட்டத்தில் 66 மையங்களும் ஒரு தனித்தேர்வு மையத்திலும் மொத்தம் 11 ஆயிரத்து 827 மாணவ மாணவிகள் தேர்வு எழுதுகிறார்கள். நாகர்கோவில் கல்வி மாவட்டத்தில் 48 மையங்களும் ஒரு தனி தேர்வு மையத்திலும் சேர்த்து மொத்தம் 11, 497 பேர் எழுதுகிறார்கள். மாவட்டத்தில் 114 மையங்கள் 2 தனி தேர்வு மையங்களிலும் 23 ஆயிரத்து 324 பேர் தேர்வு எழுதுகிறார்கள்.
வினாத்தாள்கள் தேர்வு நடந்து தனித்தனி வாகனம் மூலமாக தேர்வு மையங்களுக்கு கொண்டு செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. தேர்வை கண்காணிக்க மாவட்ட கல்வி அதிகாரி தொடக்க கல்வி அதிகாரி மற்றும் தலைமை ஆசிரியர்கள் தலைமையில் 100 பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது. பறக்கும் படை அதிகாரிகள் கண்காணிப்பு பணியை மேற்கொள்ள உள்ளனர். தேர்வு மையத்திற்குள் தேர்வு எழுதுபவர்களை தவிர மற்றவர்கள் அனுமதிக்க பட மாட்டார்கள். தேர்வு முடிந்த பிறகு விடைத்தாள்கள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் விடைத்தாள்கள் பாதுகாப்பு மையங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. மார்த்தாண்டம் அரசு பெண்கள் மேல் நிலைப்பள்ளி நாகர்கோவில் முதன்மை கல்வி அலுவலகத்தில் விடைத்தாள்கள் பாதுகாப்பாக வைக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *